Skip to main content

இணையத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் மொபைல் செயலி இயங்குதளத் தனியுரிமைக் கொள்கை

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது 2021 மே 25 ஆம் தேதி

அறிமுகம்

Science 37, Inc. (“Science 37,” “நாங்கள்” அல்லது “எங்கள்”) உங்கள் தகவல்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. அதற்காக, மருத்துவகச் சோதனைகளில் பங்கேற்பதை எளிதாக்க நாங்கள் வழங்கும் Science 37-இன் இணைய அடிப்படையிலான மற்றும்/அல்லது மொபைல் செயலி இயங்குதளத்தில் (“இயங்குதளம்”) உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்த Science 37 இயங்குதளத் தனியுரிமைக் கொள்கை (“தனியுரிமைக் கொள்கை”), இந்த இயங்குதளத்துடனான உங்கள் ஊடாடல்களின் போது நீங்கள் வழங்கும் தகவல்களை Science 37 எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது மற்றும் வெளிப்படுத்துகிறது என்பதை விளக்குகின்றது. இது, தகவலறிந்த ஒப்புதல் படிவத்தில் ஸ்பான்சரால் விளக்கிக் காட்டப்பட்டுள்ள தரவு கையாளுதல் நடைமுறைகளில் இருந்து வேறுபட்டதாகும்.

எத்தகைய தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன மற்றும் மருத்துவகச் சோதனையின் ஒரு பகுதியாக உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் வெளிப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பான முக்கியான தீர்மானங்களை ஸ்பான்சர்கள் எடுக்கிறார்கள். இந்த மருத்துவகச் சோதனையில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன, உங்கள் தரவுப் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் மருத்துவகச் சோதனை குறித்து ஏதேனும் கேள்விகளைக் கேட்பதற்கு யாரைத் தொடர்புகொள்வது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்புடைய தகவலறிந்த ஒப்புதல் படிவத்தின் இரகசியத்தன்மைப் பகுதியைப் பாருங்கள்.

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் பயன்படுத்தப்படுவது போல், “தனிப்பட்ட தகவல்கள்” என்பது ஒரு குறிப்பிட்ட இயற்கை நபரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அடையாளம் காணப் பயன்படுத்த முடிகின்ற அல்லது நியாயமான முறையில் இணைக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் குறிக்கிறது.
 

உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

இயங்குதளப் பயனர் கணக்குகளை உருவாக்குவதற்காக ஸ்பான்சர் கோரும்போது பின்வரும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்:

  • உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி
  • உங்கள் மொழி விருப்பம் மற்றும் நேர மண்டலம்

நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறோம்

இந்த இயங்குதளத்தில் நீங்கள் படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது உங்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்போம். நீங்கள் எங்களுடன் தகவல்தொடர்பு கொள்ளும்போதும் (எடுத்துக்காட்டாக, மின்னஞ்சல் மூலம்) இந்த இயங்குதளத்தில் உள்ள ஒரு பிரச்சினையைப் பற்றி புகாரளிக்கும்போதும் நாங்கள் தகவலைச் சேகரிக்கலாம்.

கோரப்பட்ட இயங்குதளச் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க வேண்டும். கோரப்பட்ட தகவல்களை நீங்கள் வழங்கவில்லை என்றால், எங்களால் இயங்குதளச் சேவைகளை வழங்க முடியாமல் போகலாம். இந்த இயங்குதளத்துடன் தொடர்புடைய வகையில் பிற நபர்களுக்கு அல்லது எங்கள் சேவை வழங்குநர்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் வெளிப்படுத்தினால், அவ்வாறு செய்வதற்கும், இந்தத் தனியுரிமைக் கொள்கையின்படி தகவல்களைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதிப்பதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருப்பதை நீங்கள் தெரிவிக்கிறீர்கள்.
 

தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் வெளிப்படுத்துகிறோம்

பயன்பாடு

இந்த மருத்துவகச் சோதனையில் உங்கள் பங்கேற்புடன் தொடர்புடைய சட்ட, ஒப்பந்த மற்றும் வணிக நோக்கங்களுக்காக நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம். உதாரணமாக இதில், சேவை தொடர்பான நோக்கங்களுக்காக (உங்கள் பயனர் அனுபவத்தை உகந்ததாக்குதல், இந்த இயங்குதளத்தின் பாதுகாப்பைப் பேணுதல் போன்றவை), இணக்கப்பாட்டை ஆதரிப்பதற்காக (உங்கள் அமைவிடத்தால், உங்களுக்குப் பொருந்தும் சட்டங்களை அல்லது ஒழுங்குவிதிகளைத் தீர்மானிக்க முடியும்), மொழி விருப்பத்தேர்வுத் தனிப்பயனாக்கங்களை வழங்குவதற்காக தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல் ஆகியவை உள்ளடங்கும்.

நாங்களும் எங்கள் சேவை வழங்குநர்களும் பின்வரும் நோக்கங்களுக்காகத் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துகிறோம்:

  • இயங்குதளச் செயல்பாட்டை வழங்குதலும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுதலும்.
  • உங்கள் பதிவுசெய்யப்பட்ட கணக்கிற்கான அணுகலை ஏற்பாடு செய்தல் மற்றும் தொடர்புடைய வாடிக்கையாளர் சேவையை உங்களுக்கு வழங்குதல் போன்ற இந்த இயங்குளத்தின் தொழிற்பாடுகளை உங்களுக்கு வழங்குதல்.
  • ஆன்லைன் தொடர்பு முறைகளில் ஒன்றின் ஊடாக அல்லது வேறு விதத்தில் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும் போது உங்கள் விசாரணகளைகளுக்குப் பதிலளித்தல்; உதாரணமாக நீங்கள் எங்களுக்கு கேள்விகளை, பரிந்துரைகளை, பாராட்டுகளை அல்லது புகார்களை அனுப்பும்போது.
  • எங்கள் விதிமுறைகள், நிபந்தனைகள், கொள்கைகள் மற்றும் இந்த இயங்குதளத்திற்கான மாற்றங்கள் போன்ற நிர்வாகத் தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்.

உங்களுடனான எங்கள் ஒப்பந்த உறவை நிர்வகிக்க மற்றும்/அல்லது சட்டபூர்வமான கடமைக்கு இணக்கமாகச் செயல்படுவதற்காக நாங்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
 

  • எங்கள் வணிக நோக்கங்களை நிறைவேற்றுதல்.
  • கோளாறுகளைச் சரிசெய்தல், தரவுப் பகுப்பாய்வு, சிஸ்டம் சோதனை ஆகியவை உள்ளிட்ட இயங்குதளத்தின் பாதுகாப்பை நிர்வகித்தலும் பாதுகாத்தலும்.
  • தரவுப் பகுப்பாய்விற்காக; உதாரணமாக, இயங்குதளத்தைப் பற்றிய போக்குகளை மதிப்பிடுதல், இயங்குதளத்தின் செயல்திறனை மேம்படுத்துதல்.
  • தணிக்கைகளுக்காக, எங்கள் உள்ளகச் செயல்முறைகள் எதிர்பார்த்தவாறு செயல்படுகின்றனவா என்பதை சரிபார்ப்பதற்காகவும், சட்ட, ஒழுங்குமுறை அல்லது ஒப்பந்தத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும்.
  • மோசடித் தடுப்பு மற்றும் மோசடிப் பாதுகாப்புக் கண்காணிப்பு நோக்கங்களுக்காக; உதாரணமாக, சைபர் தாக்குதல்களை அல்லது அடையாளத் திருட்டு முயற்சிகளைக் கண்டறிந்து தடுத்தல்.
  • புதிய தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்குவதற்காக.
  • எங்கள் தற்போதைய தயாரிப்புகளையும் சேவைகளையும் முன்னேற்றுவதற்காக, மேம்படுத்துவதற்காக, பழுதுபார்த்தலுக்காக, பராமரித்தலுக்காக அல்லது மாற்றியமைத்தலுக்காக, அத்துடன் தரம் மற்றும் பாதுகாப்பு உத்தரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக.

 உங்களுடனான எங்கள் ஒப்பந்த உறவை நிர்வகிக்க, சட்டபூர்வமான கடமைக்கு இணக்கமாகச் செயல்பட மற்றும்/அல்லது எங்கள் சட்டபூர்வமான அக்கறையின் அடிப்படையில் நாங்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்.
 

  • தனிப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்தல் மற்றும்/அல்லது அநாமதேயமாக்குதல்.
  • தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்தும் தனிப்பட்ட தகவல்களாகக் கருதப்படாத விதத்தில் அவற்றை நாங்கள் திரட்டலாம் மற்றும்/அல்லது அநாமதேயமாக்கலாம். உங்களை அல்லது வேறு எவரேனும் தனிப்பட்ட ஆட்களை அடையாளம் காட்டாத வரையில், எந்தவொரு நோக்கத்திற்காகவும் நாங்கள் பயன்படுத்தக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய பிற தரவுகளை எமது பயன்பாட்டுக்காக உருவாக்குவதற்காக நாங்கள் அவ்வாறு செய்கின்றோம். உதாரணமாக, எதிர்கால மேம்பாடுகளை அறிவிப்பதற்காக இயங்குதளப் பயனர்கள் இயங்குதளத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை அடையாளம் காண்பதற்காக ஒட்டுமொத்த தரவுகளை நாங்கள் ஒருங்கிணைக்கக்கூடும். 

வெளிப்படுத்துகை

எங்கள் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்களுக்கு அவர்கள் எங்களுக்கு வழங்கும் சேவைகளை எளிதாக்குவதற்கு தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படலாம். இணையதள ஹோஸ்டிங், தரவுப் பகுப்பாய்வு, மோசடித் தடுப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு வழங்கல், வாடிக்கையாளர் சேவை, மின்னஞ்சல் அனுப்புதல், தணிக்கை மற்றும் ஏனைய சேவைகள் போன்ற சேவைகளை வழங்குபவர்கள் இதில் உள்ளடங்கலாம்.
 

பிற பயன்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள்

தேவையைப் பொறுத்து அல்லது பொருத்தமான சந்தர்ப்பங்களில், குறிப்பாக பின்வருவன உள்ளிட்ட சட்டரீதியான கடமை அல்லது சட்டபூர்மான அக்கறை உள்ளபோது உங்களின் குறிப்பான ஒப்புதலின்றி, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் மற்றும் வெளிப்படுத்துகிறோம்:

  • நீங்கள் வசிக்கும் நாட்டுக்கு வெளியே உள்ள சட்டங்களை உள்ளடக்க முடியுமான அரசாங்க அல்லது ஒழுங்குபடுத்தல் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல், நீதிமன்றக் கட்டளைக்கு, சட்டத்திற்கு, ஒழுங்குவிதிக்கு, அல்லது சட்ட நடவடிக்கைக்கு இணக்கமாகச் செயல்படுதல்.
  • கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல் அல்லது அவசியமானது அல்லது பொருத்தமானது என நாங்கள் நம்பும் தகவல்களை வழங்குதல் அடங்கலாக பொது மற்றும் அரசாங்க ஆணையங்களுக்கு ஒத்துழைத்தல் (இதில் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கு வெளியில் உள்ள ஆணையங்களும் அடங்கும்).
  • சட்ட அமலாக்கத்திற்கு ஒத்துழைத்தல், உதாரணமாக சட்ட அமலாக்கக் கோரிக்கைகளுக்கும் ஆணைகளுக்கும் நாங்கள் பதிலளித்தல் அல்லது நாங்கள் முக்கியமானவை என்றும் நம்பும் தகவல்களை வழங்குதல் போன்றவை இதில் உள்ளடங்கும்.
  • எமது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமல்படுத்துதல் அல்லது எமது மற்றும்/அல்லது துணை நிறுவனங்களின், உங்கள் அல்லது பிறரின் உரிமைகள், தனியுரிமை, பாதுகாப்பு அல்லது சொத்துக்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டக் காரணங்களுக்காக.
  • விற்பனை அல்லது வணிகப் பரிவர்த்தனைகள் தொடர்பாக. எமது வணிகம், சொத்துக்கள் அல்லது பங்குகளை (ஏதேனும் திவால் நிலை அல்லது அது போன்ற சட்ட நடவடிக்கைகள் அடங்கலாக) முழுமையாக அல்லது அவற்றின் ஏதேனும் ஒரு பகுதியை மீள ஒழுங்கமைத்தல், ஒன்றிணைத்தல், விற்றல், கூட்டு முயற்சியாக்குதல், ஒதுக்கீடு செய்தல், இடமாற்றல் அல்லது வேறு உரிமை மாற்றங்கள் நிகழுமிடத்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு மூன்றாம் தரப்புக்கு வெளிப்படுத்துவதற்கான அல்லது மாற்றல் செய்வதற்கான ஒரு சட்டபூர்வமான அக்கறையை நாங்கள் கொண்டுள்ளோம்.

பிற தகவல்கள்

பிற தகவல்கள்” என்பது உங்கள் குறிப்பான அடையாளத்தை வெளிப்படுத்தாத அல்லது அடையாளம் காணத்தக்க நபருடன் நேரடியாகத் தொடர்புபடாத எந்தவொரு தகவலையும் குறிக்கும். இந்த இயங்குதளம் பின்வருவன போன்ற ஏனைய தகவல்களைச் சேகரிக்கும்:

  • உலாவி மற்றும் சாதனத் தகவல்கள்
  • செயலியின் பயன்பாட்டுத் தரவு
  • பிக்சல் குறிச்சொற்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள்
  • உங்கள் குறிப்பான அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் திரட்டப்பட்ட தகவல்கள்

 
பொருத்தமான சட்டத்தின் கீழ் நாங்கள் வேறு விதமாகச் செய்ய வேண்டியிருப்பது தவிர, நாங்கள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் பிற தகவல்களைப் பயன்படுத்தலாம் மற்றும் வெளிப்படுத்தலாம். பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் பிற தகவல்களை தனிப்பட்ட தகவல்களாக நாங்கள் கருத வேண்டியிருந்தால், இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தும் மற்றும் வெளிப்படுத்தும் நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தலாம் மற்றும் வெளிப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், நாங்கள் பிற தகவல்களை தனிப்பட்ட தகவலுடன் இணைக்கலாம். நாங்கள் அவ்வாறு செய்தால், ஒருங்கிணைந்த தகவல்களை தனிப்பட்ட தகவல்களாகவே கருதுவோம்.
 

தனிப்பட்ட தகவல்களை இடமாற்றம் செய்தல் மற்றும் சேமித்துவைத்தல்

Science 37-இன் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸில் உள்ளது. எங்களுடைய நிறுவனங்கள் உள்ள அல்லது சேவை வழங்குநர்களை நாங்கள் ஈடுபடுத்தக்கூடிய எந்தவொரு நாட்டிலும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படலாம் என்பதுடன் இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துவதன் முலம் உங்கள் தகவல்கள் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கு வெளியே, அமெரிக்கா உள்ளிட்ட உங்கள் நாட்டை விட வித்தியாசமான தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு மாற்றப்பட முடியும் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். சில சூழ்நிலைகளில், அந்த மற்றைய நாடுகளிலுள்ள நீதிமன்றங்களுக்கு, சட்ட அமலாக்க முகவர்களுக்கு, ஒழுங்குமுறை முகவர்களுக்கு அல்லது பாதுகாப்பு ஆணையங்களுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகும் உரிமை வழங்கப்படலாம்.
 

EEA, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் தொடர்பான கூடுதல் தகவல்கள்

சில EEA அல்லாத நாடுகள் அவற்றின் தரநிலைகளுக்கு ஏற்ப போதுமான அளவு தரவுப் பாதுகாப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஆணையம், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன (போதுமான பாதுகாப்பு உள்ள நாடுகளின் முழுப் பட்டியல் இங்கு உள்ளது. EEA, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து, ஐரோப்பிய ஆணையத்தால் போதுமானதாகக் கருதப்படாத நாடுகளுக்குச் செய்யப்படும் இடமாற்றல்களுக்கு, உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க ஐரோப்பிய ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான ஒப்பந்த விதிமுறைகள் போன்ற போதுமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். கீழே தரப்பட்டுள்ள “எங்களைத் தொடர்பு கொள்வது எவ்வாறு” என்ற பகுதியின்படி எம்மைத் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நடவடிக்கைகளின் நகல் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களின் இடமாற்றல் அல்லது சேமிப்பு பற்றிய தனியுரிமை தொடர்பான கேள்விகள் எவையும் உங்களுக்கு இருந்தால், Privacy@Science37.com -இல் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
 

தரவுப் பாதுகாப்பு

நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க, Science 37 அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை அதிகாரமளிக்கப்படாத அணுகல், பயன்பாடு அல்லது வெளிப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவும் நியாயமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், நடைமுறைகள் மற்றும் நிறுவன நடவடிக்கைகளின் ஒரு கலப்பு முறையைப் பயன்படுத்த நாங்கள் முயல்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு தரவுப் பரிமாற்றம் அல்லது சேமிப்பக அமைப்பும் 100% பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளிக்க முடியாதுள்ளது. எங்களுடனான உங்கள் ஊடாடல் இனிமேலும் பாதுகாப்பானது அல்ல என்று நம்புவதற்கு உங்களுக்குக் காரணம் இருந்தால், தயவுசெய்து கீழே உள்ள "எங்களைத் தொடர்பு கொள்வது எவ்வாறு" பகுதியின்படி உடனடியாக எங்களுக்கு அறிவியுங்கள்.
 

தரவுகளைத் தக்கவைத்தல்

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி, பெறப்பட்டதன் நோக்கத்தின் அடிப்படையில் தேவைப்படுகிற அல்லது அனுமதிக்கப்படுகிற கால அளவிற்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் தக்கவைப்புக் காலங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவுகோல்களில் பின்வருவன உள்ளடங்கும்:

  • நாங்கள் உங்களுடன் தொடர்ச்சியான உறவைக் கொண்டிருக்கும் மற்றும் உங்களுக்கு இயங்குதளத்தை வழங்கும் காலஅளவு (எடுத்துக்காட்டாக, நீங்கள் பங்கேற்கும் ஆய்வின் கால அளவு);
  • நாங்கள் கட்டுப்பட வேண்டிய சட்டபூர்வமான கடமை உள்ளதா; அல்லது
  • எங்கள் சட்டபூர்வமான நிலையைச் சார்ந்து தக்கவைத்தல் அறிவுறுத்தப்படுகிறதா (வரம்புகள், தணிக்கை அல்லது ஒழுங்குபடுத்தல் விசாரணைகளுக்குப் பொருந்தும் நிலையியல் சட்டங்கள் போன்றவை). 

உங்கள் உரிமைகள்

நீங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுக, திருத்த, புதுப்பிக்க, முடக்க, கட்டுப்படுத்த அல்லது நீக்க, தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்கம் செய்வதை எதிர்க்க அல்லது அதிலிருந்து விலக அனுமதி கோர விரும்பினால், அல்லது மற்றொரு நிறுவனத்திற்கு அனுப்பும் நோக்கத்திற்காக உங்கள் தகவல்களின் பிரதியொன்றைப் பெறுவதற்கு கோரிக்கை முன்வைக்க விரும்பினால் (பொருந்தும் சட்டத்தால் இந்த உரிமைகள் உங்களுக்கு வழங்கப்படும் அளவிற்கு), தயவுசெய்து இந்தத் தனியுரிமைக் கொள்கையின் இறுதியில் தரப்பட்டுள்ள தொடர்புத் தகவல்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க உங்கள் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளிப்போம்.

உங்கள் கோரிக்கையில், நீங்கள் எந்தத் தனிப்பட்ட தகவல் மாற்றப்பட விரும்புகிறீர்கள் என்பதை அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலை எங்கள் தரவுத்தளத்திலிருந்து முடக்க விரும்புகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள். உங்கள் பாதுகாப்பிற்காக, உங்கள் கோரிக்கையை எங்களுக்கு அனுப்ப நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்கள் பற்றிய கோரிக்கைகளை மட்டுமே எங்களால் செயல்படுத்த முடியும் என்பதுடன் உங்கள் கோரிக்கையை செயல்படுத்துவதற்கு முன் உங்கள் அடையாளத்தை நாங்கள் சரிபார்க்கும் தேவை ஏற்படலாம். நியாயமாக நடைமுறைச் சாத்தியமானளவு விரைவாக உங்கள் கோரிக்கைக்கு இணங்கச் செயல்படுவதற்கு நாங்கள் முயற்சிப்போம்.

பதிவுகளை வைத்திருக்கும் நோக்கங்களுக்காக மற்றும்/அல்லது மாற்றம் அல்லது நீக்குதலைக் கோருவதற்கு முன்பு நீங்கள் தொடங்கிய ஏதேனும் பரிவர்த்தனைகளைப் பூர்த்தி செய்ய சில தகவல்களை நாங்கள் வைத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவகச் சோதனையிலிருந்து விலகினால் அல்லது நீக்கப்பட்டால், நாங்கள் இயங்குதளத்திலிருந்து எந்தப் புதிய தகவலையும் சேகரிக்கவோ பெறவோ மாட்டோம். எவ்வாறாயினும், உங்கள் விலகல் கோரிக்கை கிடைத்து செயலாக்கப்பட்ட நேரம் வரையில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட, செயலாக்கப்பட்ட மற்றும் சேமிக்கப்பட்ட தகவல்கள் நீக்கப்படாதிருக்கலாம் என்பதுடன் பொருத்தமான சட்டம் வேறு விதத்தில் தேவைப்படுத்தினால் அன்றி, ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு இணக்கமாகச் செயல்படுதல் உள்ளிட்ட மருத்துவகச் சோதனை நோக்கத்திற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம்.
 

இத்தனியுரிமைக் கொள்கையில் செய்யப்படும் மாற்றங்கள்

நாங்கள் இந்த இயங்குதளத்தில் மாற்றங்களைச் செய்யலாம் என்பதுடன் அதன் விளைவாக, அந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்த தனியுரிமைக் கொள்கையில் திருத்தம் செய்வதற்கான தேவை ஏற்படலாம். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் செய்யப்படும் அத்தகைய எல்லா மாற்றங்களையும் எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம், எனவே நீங்கள் இந்தப் பக்கத்தை அவ்வப்போது மீளாய்வு செய்ய வேண்டும். எந்தவொரு மாற்றமும், நாங்கள் திருத்தப்பட்ட தனியுரிமைக் கொள்கையை எங்கள் இணையதளத்தில் இடுகையிடும்போது அமலுக்கு வரும்.
 

எங்களைத் தொடர்பு கொள்வது எவ்வாறு

Science 37, Inc.
Jen Davis, Deputy General Counsel and Privacy Officer
600 Corporate Pointe #320
Culver City, CA 90230
 

EEA மற்றும் ஐக்கிய இராச்சியம் தொடர்பான கூடுதல் தகவல்கள்

மேலும் நீங்கள்

  • எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை (DPO) Privacy@Science37.comக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
  • உங்கள் நாட்டுக்குரிய அல்லது உங்களுடைய வழக்கமான வதிவிடம் அல்லது வேலை செய்யும் இடம் அல்லது பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்பு சட்ட மீறல் நடந்ததாகக் கூறப்படும் பிராந்தியத்திற்குரிய மேற்பார்வை ஆணையத்திடம் நேரடியாக ஒரு புகாரைத் தாக்கல் செய்யுங்கள். தரவுப் பாதுகாப்பு ஆணையங்களின் ஒரு பட்டியல் http://ec.europa.eu/newsroom/article29/item-detail.cfm?item_id=612080 இல் உள்ளது.