நீங்கள் Science 37இன் இணைய அடிப்படையிலான அல்லது மொபைல் செயலி இயங்குதளத்தைப் பயன்படுத்துவது, நீங்கள் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டதாகக் கருதப்படும். மருத்துவகச் சோதனையில் நீங்கள் பங்கேற்பதை எளிதாக்குவதற்காக Science 37இன் இணைய அடிப்படையிலான மற்றும்/அல்லது மொபைல் செயலி இயங்குதளத்திற்கு அணுகல் உங்களுக்கு வழங்கப்பட்டது. தயவுசெய்து இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் குறிப்பாக உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக நாங்கள் பெரிய எழுத்துக்களில், அடிக்கோடிட்ட, அல்லது தடித்த எழுத்துக்களில் வழங்கியுள்ள உத்தரவாதப் பொறுப்புத் துறத்தல், உரிமக் கட்டுப்பாடுகள், உங்கள் பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்கள், பொறுப்புகளின் வரம்பு, இழப்பீடு மற்றும் ஆளுகைச் சட்டம் ஆகியவை தொடர்பான பிரிவுகளை நீங்கள் கவனமாக வாசித்தீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நிராகரிப்பது அந்தச் சோதனையில் பங்கேற்பதற்கான உங்கள் தகுதியைப் பாதிக்கலாம்.
நாங்கள் யார், இந்த ஒப்பந்தத்தைப் பற்றி
Science 37, Inc. (கூட்டாக “Science 37”, “நாங்கள்” அல்லது “எங்கள்” எனக் குறிப்பிடப்படும்) நிறுவனம், தனது Science 37 இணைய அடிப்படையிலான மற்றும்/அல்லது மொபைல் செயலி இயங்குதளத்தின் (இயங்குதளம்) உரிமத்தை உங்களுக்கு வழங்குவதன் ஊடாக மருத்துகச் சோதனை ஒன்றில் உங்கள் பங்கேற்புக்கான வசதி ஏற்பாட்டை வழங்குகின்றது. நீங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்திய மருத்துவகச் சோதனையின் (“சோதனை”) ஒரு பகுதியாக Science 37 இயங்குதளத்தைப் பயன்படுத்த இந்த இயங்குதளம் உங்களுக்கு உதவுகிறது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்”), இந்த இயங்குதளத்திற்கும் சேவைக்குமான உங்கள் அணுகலுடன் தொடர்புடைய தனிநபரான (“நீங்கள்” மற்றும் “உங்கள்”) உங்களுக்கும் Science 37 க்கும் இடையிலான சட்டபூர்வமான ஓர் ஒப்பந்தத்தை உருவாக்குகின்றது. இயங்குதளத்தை வழங்குதல் இந்த விதிமுறைகளிலும் நிபந்தனைகளிலும் “சேவை” எனக் குறிப்பிடப்படும்.
இந்த இயங்குதளத்தையும் சேவையையும் உங்களுக்குக் கிடைக்கச் செய்வது என Science 37 இன் பங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Science 37 நிறுவனம், மருத்துவகச் சோதனையின் ஸ்பான்சர், நலப்பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் இச்சேவையின் ஊடாகத் தொடர்புடைய சேவைகளை உங்களுக்கு வழங்குகின்ற பிற ஆட்கள் ஆகியோரிலிருந்து சுயாதீனமான ஒரு நிறுவனம் ஆகும்.அவ்வாறான நலப்பராமரிப்பு வழங்குநர்களின் ஊழியர்களின் செயல்களுக்கு, விடுபாடுகளுக்கு அல்லது அவர்களால் முன்வைக்கப்படும் ஏதேனும் தொடர்பாடல் உள்ளடக்கங்களுக்கு Science 37 நிறுவனம் பொறுப்பல்ல என்பதுடன் எந்தவொரு சட்டக் கடப்பாடும் அதற்கு இல்லை. Science 37 இந்த இயங்குதளத்தையும் சேவைகளையும் வழங்குவதன் மூலம் மருத்துவ அல்லது சுகாதார ஆலோசனைகளை அல்லது சேவைகளை வழங்குவதில்லை.
உங்கள் தனியுரிமை
இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக நீங்கள் வழங்கும் ஏதேனும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எமது தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் பயன்படுத்துவோம். இந்தத் தரவுகளை வேறு ஏதேனும் வழிகளில் நாங்கள் பயன்படுத்தமாட்டோம்.
நீங்கள் ஓர் ஆப் ஸ்டோரிலிருந்து இந்த இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்தால், அந்த ஆப் ஸ்டோரின் விதிமுறைகளும் நிபந்தனைகளும் தனியுரிமைக் கொள்கையும் உங்களுக்குப் பொருந்தக் கூடும். இயங்குதளத்தைப் பதிவிறக்குவதற்கு நீங்கள் பயன்படுத்தும் தொடர்புடைய ஆப் ஸ்டோரின் விதிமுறைகளையும் அவர்கள் உங்கள் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்களின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் வாசிக்குமாறு உங்கள் நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.
இந்த இயங்குதளத்திற்கான ஆதரவு
நீங்கள் இந்த இயங்குதளத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் அல்லது இயங்குதளத்தைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், தயவுசெய்து techsupport@science37.com ஊடாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் 13 (அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் அல்லது ஆட்சிப் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச வயதுக்குச் சமமான) வயதுடையவராக அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குள் நுழைய உங்களுக்கு சட்டப்பூர்வமான ஆற்றல் இல்லை என்றால் (எடுத்துக்காட்டாக, நீங்கள் சிறியவர் என்பதால்), தயவுசெய்து இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் உங்கள் சட்டப்பூர்வ பாதுகாவலருடன் வாசித்து, அவர் உங்கள் பயன்பாட்டுக்கும் இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் இயங்குதளத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்
இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டமைக்குப் பிரதி உபகாரமாக நீங்கள்:
(i) இந்த இயங்குதளத்தின் பிரதியொன்றை உங்கள் மொபைல் சாதனத்தில் பதிவிறக்கம் செய்யவும், உங்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மாத்திரம் அந்தச் சாதனத்தில் இந்த இயங்குதளத்தையும் சேவைகளையும் பார்க்கவும், பயன்படுத்தவும், காட்சிப்படுத்தவும் முடியும்; அத்துடன்
(ii) நாங்கள் உங்களுக்காகக் கிடைக்கச் செய்யும் பிழைகளுக்கான “ஒட்டுக்கள்” மற்றும் திருத்தங்களை ஒருங்கிணைக்கும் இயங்குதளத்திற்கான ஏதேனும் மேலதிக மென்பொருள் குறியீடு அல்லது புதுப்பித்தல்களைப் பெற்றுப் பயன்படுத்தவும் முடியும்.
நீங்கள் இந்த இயங்குதளத்தை வேறு ஒருவருக்கு இடமாற்றக்கூடாது.
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடனான உங்கள் உடன்படிக்கைக்கான பரிமாற்றமாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி இயங்குதளத்தையும் சேவையையும் பயன்படுத்துவதற்கான உரிமையை நாங்கள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்குகிறோம். அதை மீறி நீங்கள் இந்த இயங்குதளத்தை அல்லது சேவையை வேறு ஒருவருக்கு இடமாற்றக்கூடாது.
இயங்குதளத்திற்கான புதுப்பிப்புகள் மற்றும் சேவைக்கான புதுப்பிப்புகள்
செயல்திறனை மேம்படுத்துவதற்காக, தொழிற்பாட்டை மேம்படுத்துவதற்காக, இயக்க முறைமையில் செய்யப்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிப்பதற்காக அல்லது பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாங்கள் அவ்வப்போது தன்னியக்கமாக இந்த இயங்குதளத்தை மற்றும்/அல்லது சேவையைப் புதுப்பிக்கலாம் அல்லது மாற்றலாம். அதற்கு மாற்றாக, இந்தக் காரணங்களுக்காக இயங்குதளத்தைப் புதுப்பிக்குமாறு நாங்கள் உங்களைக் கோரலாம்.
நீங்கள் அத்தகைய புதுப்பிப்புகளை நிறுவாமல் இருப்பதற்குத் தேர்வுசெய்தால் அல்லது தானியங்கி புதுப்பிப்புகளிலிருந்து விலகினால், உங்களால் தொடர்ந்து இயங்குதளத்தையும் சேவையையும் பயன்படுத்த முடியாது.
நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி அல்லது சாதனம் வேறு ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்தால்
உங்களுக்குச் சொந்தமில்லாத ஏதேனும் தொலைபேசிக்கு அல்லது பிற சாதனத்திற்கு நீங்கள் இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்தால், அவ்வாறு செய்வதற்கு உரிமையாளரின் அனுமதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் இந்த இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்துள்ள தொலைபேசி அல்லது பிற சாதனம் உங்களுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அல்லது சொந்தமில்லாவிட்டாலும், இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணக்கமாகச் செயல்படுவதற்கு நீங்களே பொறுப்பானவர்.
உரிமக் கட்டுப்பாடுகள்
பின்வருவனற்றைச் செய்யமாட்டீர்கள் என்று நீங்கள் உடன்படுகிறீர்கள்:
(i) இந்த உரிமத்தின் மூலம் தெளிவாக அனுமதிக்கப்பட்டவற்றுகாகவன்றி இந்த இயங்குதளத்தை நகலெடுத்தல்;
(ii) காப்புரிமை பெறக்கூடியதாக இருப்பினும் அல்லது காப்புரிமை பெற முடியாததாக இருப்பினும், இந்த இயங்குதளத்தை மாற்றியமைத்தல், மொழிபெயர்த்தல், இயைபாக்குதல், அல்லது வழிப்பொருள் படைப்புக்களை அல்லது மேம்பாடுகளை உருவாக்குதல்;
(iii) இயங்குதளத்தை அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியை தலைகீழாக உருவாக்குதல், பகுதிகளாகப் பிரித்தல், தொகுப்பு நீக்குதல், குறியீடு நீக்குதல், அல்லது அதன் மூலம் குறியீட்டைப் பிரித்தெடுப்பதற்கு அல்லது அதை அணுகுவதற்கு முயற்சித்தல்;
(iv) ஏதேனும் வர்த்தகச் சின்னங்களை அல்லது ஏதேனும் பதிப்புரிமையை, வர்த்தகச் சின்னத்தை, காப்புரிமையை, அல்லது பிற புலமைச் சொத்துக்களை அல்லது சொத்துரிமை அறிவித்தல்களை அகற்றுதல், நீக்குதல், மாற்றியமைத்தல், அல்லது இருட்டடிப்புச் செய்தல்;
(v) இந்த இயங்குதளத்தை, அல்லது இந்த இயங்குதளத்தின் ஏதேனும் அம்சங்களை அல்லது தொழிற்பாடுகளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஏதேனும் ஒரு மூன்றாம் தரப்புக்கு எந்தவொரு நேரத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் அணுகக்கூடிய விதத்தில் அதனை வலையமைப்பு ஒன்றில் கிடைக்கச் செய்தல் அடங்கலாக வாடகைக்கு வழங்குதல், குத்தகைக்கு வழங்குதல், விற்பனை செய்தல், துணை உரிமம் வழங்குதல், ஒப்படைத்தல், விநியோகித்தல், வெளியிடுதல், மாற்றுதல், அல்லது எந்தவொரு நேரத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் அணுகக்கூடிய விதத்தில் அதனை வலையமைப்பு ஒன்றில் கிடைக்கச் செய்தல்; அல்லது
(vi) இந்த இயங்குதளத்திலுள்ள அல்லது அதைப் பாதுகாப்பதிலுள்ளஏதேனும் நகல் பாதுகாப்பை, உரிமைகளின் மேலாண்மையை, அல்லது பாதுகாப்பு அம்சங்களை நீக்குதல், முடக்குதல், தந்திரமாகத் தவிர்த்தல், அல்லது வேறு வகையில் ஏதேனும் வேலைப்பாடுகளை உருவாக்குதல் அல்லது அமல்படுத்துதல்.
உங்கள் பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்கள்
இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பின்வருவனவற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்:
(i) நீங்கள் இந்த இயங்குதளத்தை ஏதேனும் ஒரு சட்டவிரோதமான நோக்கத்திற்காக, அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் இந்த விதிமுறைகளுக்கு இணக்கமில்லாத முறையில் பயன்படுத்தாதிருத்தல் அல்லது மோசடியாக அல்லது தீங்குவிளைவிக்கும் விதத்தில் செயல்படாதிருத்தல், உதாரணமாக இந்த இயங்குதளத்தை அல்லது சேவையை ஹேக்கிங் செய்தல் மூலம் அல்லது அவற்றில் வைரஸ்கள் அல்லது தீங்கான தரவுகள் போன்ற தீங்குவிளைவிக்கும் குறியீடுகளைச் உட்செருகுதல் மூலம்.
(ii) இந்த இயங்குதளத்தை அல்லது சேவையை நீங்கள் பயன்படுத்துவதுடன் தொடர்புடையதாக எமது அல்லது ஏதேனும் ஒரு மூன்றாம் தரப்பின் புலமைச் சொத்து உரிமைகளை நீங்கள் மீறாதிருத்தல்;
(iii) இந்த இயங்குதளத்தை அல்லது சேவையை நீங்கள் பயன்படுத்துவதுடன் தொடர்புடையதாக அவதூறான, வெறுப்பூட்டும் அல்லது மறுக்கப்பட வேண்டிய ஏதேனும் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்யாதிருத்தல்;
(iv) இந்த இயங்குதளத்திற்குச் சேதம் விளைவிக்கும், அதனை முடக்கும், அளவுக்கு அதிகமான சுமையை ஏற்படுத்தும், செயலிழக்கச் செய்யும் அல்லது இயங்குதளத்தின் அல்லது சேவையின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது மற்றைய பயனர்களிடத்தில் தலையிடும் விதத்தில் இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தாதிருத்தல்; மற்றும்
(v) இந்தச் சேவை மூலம் நீங்கள் ஏதேனும் தகவல்களை அல்லது தரவுகளைச் சேகரிக்காதிருத்தல் அல்லது பயனாகப் பெறாதிருத்தல்.
புலமைச் சொத்து உரிமைகள்
இந்த இயங்குதளத்திலும் சேவையிலும் உள்ள புலமைச் சொத்து உரிமைகள் அனைத்தும் உலகம் முழுவதிலும் Science 37 க்குச் சொந்தமானதாகும் என்பதுடன் இந்த இயங்குதளத்திலும் சேவையிலும் உள்ள உரிமைகள் உங்களுக்கு உரிமமாக வழங்கப்பட்டுள்ளன (விற்கப்படவில்லை). இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்க இந்த இயங்குதளத்தை அல்லது சேவையைப் பயன்படுத்துவதற்கான உரிமையைத் தவிர, அவற்றில் உங்களுக்கு எந்தவொரு புலமைச் சொத்து உரிமைகளும் இல்லை.
முடிவுறுத்தல்
நீங்கள் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவீர்களாயின், இந்த இயங்குதளத்தை மற்றும்/அல்லது சேவையைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஆற்றல் முடிவுறுத்தப்படும். இந்த நடவடிக்கைகள், சட்டத்தின் மூலம் Science 37 க்குக் கிடைக்கக்கூடிய வேறு ஏதேனும் உரிமை அல்லது தீர்வுக்கு மேலதிகமானவையாகும்.
இயங்குதளத்தை அணுகுவதையும் பயன்படுத்துவதையும் நிறுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் முடிவுறுத்தலாம்.
ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ எந்தவொரு காரணமும் இன்றியோ நாங்கள் எந்தவொரு நேரத்திலும் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முடிவுறுத்தலாம்.
முடிவுறுத்தப்பட்டதன் பின்னர்:
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளும் முடிவுறுத்தப்படும்; அத்துடன் நீங்கள் இயங்குதளத்தின் எல்லாப் பயன்பாடுகளையும் நிறுத்திவிட்டு, உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து இந்தச் செயலியை நீக்க வேண்டும். இயங்குதளத்திற்கான உங்கள் அணுகல் உரிமைகளை Science 37 அகற்றும்.
முடிவுறுத்துவது, சட்டத்தின் மூலமான அல்லது நேர்மை நெறியில் Science 37க்கு உள்ள உரிமைகள் அல்லது தீர்வுகள் எவற்றையும் கட்டுப்படுத்தமாட்டாது.
உத்தரவாதப் பொறுப்பைத் துறத்தல், இந்த இயங்குதளம், எந்தவொரு வகையான உத்தரவாதமுமின்றி, அனைத்து பிழைகளுடனும் குறைபாடுகளுடனும் “உள்ளது உள்ளவாறு” வழங்கப்படுகின்றது. பொருந்தும் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவில், இந்த இயங்குதளத்துடன் தொடர்புடையதாக வெளிப்படுத்தப்பட்ட, உட்கிடையான நியதிச் சட்டமாக இருப்பினும் அல்லது வேறு விதத்தில் இருப்பினும் விற்கக்கூடிய தன்மை, குறிப்பான ஒரு நோக்கத்திற்கான, தலைப்புக்கான, உரிமைகளை மீறாமைக்கான பொருத்தப்பாடு, கொடுக்கல் வாங்கலின் போது, செயல்திறன், பயன்பாடு அல்லது வர்த்தக நடவடிக்கையின்போது தோற்றம் பெறக்கூடிய உத்தரவாதங்கள் உள்ளிட்ட அனைத்து உத்தரவாதங்களையும் SCIENCE 37 வெளிப்படையாகவே பொறுப்புத் துறக்கிறது. SCIENCE 37 மேலே குறிப்பிட்டவற்றுக்குள் வரையறுக்கப்படாத விதத்தில், இந்த இயங்குதளம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று, நோக்காகக் கொள்ளப்பட்ட பெறுபேறுகளை அடையும் என்று, வேறு ஏதேனும் மென்பொருட்கள், செயலிகள், முறைமைகள் அல்லது சேவைகளுக்கு ஒத்திசைவாக இருக்கும் என்று, தடங்கலின்றி இயங்கும் என்று, எந்தவொரு செயலாற்றுகை அல்லது நம்பகத்தன்மை நியமங்களையும் பூர்த்தி செய்யும் என்று அல்லது பிழைகள் அற்றவை என்று அல்லது பிழைகளும் கோளாறுகளும் திருத்தப்பட முடியும் என்று அல்லது திருத்தப்படும் என்று எந்தவொரு உத்தரவாதத்தையும் அல்லது வாக்குறுதியையும் வழங்குவதோ ஏதேனும் ஒரு வகையில் பிரதிநிதித்துவம் செய்வதோ இல்லை.
மேலே குறிப்பிடப்பட்டவை எவ்வாறிருப்பினும், இந்த விதிமுறைகளிலும் நிபந்தனைகளிலும் உள்ள எதுவும் அஜாக்கிரதையின் மூலம் நிகழும் மரணம் அல்லது தனிப்பட்ட காயங்கள், ஏமாற்றுதல் அல்லது ஏமாற்றும் முறையிலான தவறான விளக்கம் வழங்குதல் என்பன தொடர்பில் எந்தவொரு தரப்பினதும் மற்றைய தரப்புக்கான கடமையை அல்லது பொருந்தும் சட்டத்தினால் வரையறுக்கப்படவோ விதிவிலக்களிக்கப்படவோ முடியாத பிற கடமையை விதிவிலக்காக்கவோ வரையறுக்கவோ மாட்டாது.
சில ஆளுகை எல்லைகள், உத்தரவாதப் பொறுப்பைத் துறத்தல்களின் குறிப்பிட்ட சில வரையறைகளுக்கு இடமளிப்பதில்லை, அதனால் மேலே உள்ளவற்றில் சில அல்லது அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாமல் இருக்கலாம்.
இயங்குதளத்தின் பாதுகாப்பு. பெரும்பாலான பிற இணைய மென்பொருட்கள் மற்றும் சேவைகளைப் போலவே, இந்த இயங்குதளமும் (பயனர்களால் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்கள், வலையமைப்புச் சேவைத் தரம், சமூகச் சூழல், வைரஸ்கள், ட்ரோஜன் ஹார்ஸ் நிகழ்ச்சிகள், தீங்கிழைக்கும் நிகழ்ச்சிகள் போன்ற இன்னும் பலவற்றை உள்ளிட்ட) பாதுகாப்புச் சிக்கல்களுக்கு உட்பட முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். பாதுகாப்பற்ற இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் அல்லது உங்கள் மொபைல் சாதனத்தால் செய்யப்பட்ட எந்தவொரு தரவுப் பரிமாற்றத்திற்குமான பாதுகாப்பிற்கு Science 37 பொறுப்பாகமாட்டாது என்பதுடன் Science 37ஆல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியாது. இயங்குதளத்தைப் பயன்படுத்துவதிலுள்ள உள்ளார்ந்த பாதுகாப்புத் தாக்கங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க (புதுப்பிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு அமைப்புகள் போன்ற) பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறோம்.
பொறுப்புக் கட்டுப்பாடு. பொருந்தும் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட முழுமையான அளவில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் இயங்குதளத்தை அல்லது உள்ளடக்கத்தையும் சேவைகளையும் பயன்படுத்துவதன் மூலம் அல்லது பயன்படுத்த முடியாமையின் மூலம் அல்லது அதனுடன் தொடர்புடையதாக பின்வருவன தொடர்பான எந்தவொரு பொறுப்பும் SCIENCE 37 மீது விதியாகமாட்டாது:
தனிப்பட்ட காயம், சொத்து சேதம், இழந்த இலாபங்கள், பதிலீட்டுப் பொருட்களின் அல்லது சேவைகளின் செலவு, தரவு இழப்பு, நற்பெயர் இழப்பு, வணிக இடையூறுகள், கணினிக் கோளாறு அல்லது செயலிழப்பு, அல்லது பின் விளைவான, இடைநிகழ் விளைவான, மறைமுகமான, எச்சரிக்கையான, சிறப்பான, அல்லது தண்டனையான சேதங்கள்.
அத்தகைய சேதங்கள் ஒப்பந்தத்தை முறிப்பதனால், தீங்கிழைப்பதனால் (கவனக் குறைவு அடங்கலாக), தோற்றம் பெற்றாலும் அல்லது அவ்வாறில்லாவிடனும் அல்லது அத்தகைய சேதங்கள் எதிர்வுகூறத்தக்கவையாக அல்லது அத்தகைய சேதங்கள் நிகழும் சாத்தியம் இருப்பதாக SCIENCE 37க்கு அறிவுரை கூறப்பட்டிருப்பினும் அவ்வாறில்லாவிடினும், மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் பொருந்தும். சில ஆளுகை எல்லைகள், பொறுப்புக்களின் குறிப்பிட்ட சில வரையறைகளுக்கு இடமளிப்பதில்லை, அதனால் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளில் சில அல்லது அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாமல் இருக்கலாம்.
இழப்பீடு. இந்த இயங்குதளம் வாயிலாக நீங்கள் வழங்குகிற அல்லது கிடைக்கச் செய்கிற ஒப்புதல் மட்டுமல்லாமல் இன்னும் பலவும் உட்பட, இந்த இயங்குதளத்தை அல்லது சேவையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அல்லது துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அல்லது இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் மீறுவதன் மூலம் தோற்றம் பெறக்கூடிய எந்வொரு மற்றும் அனைத்து இழப்புக்களிலிருந்தும், சேதங்களிலிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் குறைபாடுகளிலிருந்தும், உரிமைக் கோரல்களிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும், தீர்ப்புகளிலிருந்தும், தீர்வுகளிலிருந்தும், அக்கறைகளிலிருந்தும், பரிசுகளிலிருந்தும், தண்டங்களிலிருந்தும், அபராதங்களிலிருந்தும், செலவுகளிலிருந்தும் அல்லது வழக்கறிஞர்களுக்கான நியாயமான கட்டணங்கள் அடங்கலாக ஏதேனும் வகையிலான செலிவனங்களிலிருந்தும் Science 37 ஐயும் அதன் அதிகாரிகளையும் இயக்குநர்களையும், ஊழியர்களையும், முகவர்களையும் துணை நிறுவனங்களையும், வாரிசுகளையும், பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவபவர்களையும் பாதுகாக்க, பாதிக்கப்படாமல் வைத்திருக்க மற்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்க நீங்கள் உடன்படுகிறீர்கள்.
கடுமைத்தன்மை. இந்த விதிமுறைகளிலும் நிபந்தனைகளிலும் உள்ள ஏதேனும் ஓர் ஏற்பாடு பொருந்தும் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாக அல்லது அமல்படுத்த முடியாததாக இருப்பின், குறிப்பிட்ட ஏற்பாட்டின் மீதமுள்ள பகுதி, அடிப்படை வி்திமுறையை இயன்ற வரை நெருக்கமான முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்படும் என்பதுடன் இந்த விதிமுறைகளினதும் நிபந்தனைகளினதும் ஏனைய ஏற்பாடுகள் அனைத்தும் தொடர்ந்தும் முழு ஆற்றலுடனும் விளைவுகளுடனும் அமலாகும்.
ஆளுகைச் சட்டம். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சட்ட ஏற்பாட்டின் அல்லது விதியின் எந்தவொரு தெரிவுக்கும் அல்லது முரண்பாட்டுக்கும் இடமளிக்காமல், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் உள்ளகச் சட்டங்களின்படி நிர்வகிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் இருந்து அல்லது அவற்றுடன் தொடர்புடையதாக எழும் எந்தவொரு சட்ட வழக்கும், நடவடிக்கையும் அல்லது வழக்கு நடவடிக்கையும், கலிஃபோர்னியா மாநிலத்தின் நீதிமன்றங்களில் மாத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்தகைய நீதிமன்றங்கள் உங்கள் மீது நியாயாதிக்கத்தைப் பிரயோகிப்பதற்கான எந்தவொரு மற்றும் அனைத்து ஆட்சேபனைகளையும் விட்டுக் கொடுத்து அத்தகைய நீதிமன்றங்களுக்கு வழிவிட வேண்டும்.
முழு ஒப்பந்தம். இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் எமது தனியுரிமைக் கொள்கையுமே இந்த இயங்குதளம் மற்றும் சேவை தொடர்பில் உங்களுக்கும் Science 37க்கும் இடையில் செய்து கொள்ளப்படும் முழு ஒப்பந்தத்தையும் உருவாக்கும் என்பதுடன் இந்த இயங்குதளம் தொடர்பான இதற்கு முந்தைய அல்லது சமகாலத்துக்குரிய அனைத்து புரிந்துணர்வுகளையும் ஒப்பந்தங்களையும் விட மேலோங்கி நிற்கும்.
விட்டுக் கொடுப்பு. எந்தவொரு தரப்பும் இதன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் உரிமையை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறுதல், பயன்படுத்துவதில் ஏற்படும் தாமதம், அதனை விட்டுக் கொடுப்பதாகவோ இதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் உரிமையை அல்லது அதிகாரத்தைத் தனியாக அல்லது பகுதியளவில் பயன்படுத்துவது, இதன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அல்லது வேறு ஏதேனும் உரிமையை மேலும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகவோ அமையமாட்டாது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் பொருந்தக்கூடிய கொள்முதல் அல்லது பிற விதிமுறைகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டால், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் விதிமுறைகள் நிர்வகிப்பவையாக விளங்கும்.
ஒப்பந்த விதிமுறைகளுக்கான புதுப்பிப்பு. இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம். இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துவதைத் தொடர்வதன் மூலம், புதுப்பிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தப் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீங்கள் இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
தொடர்புகளுக்கு
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உங்களுக்கு ஏதேனும் சந்தேங்கள் இருப்பின் அல்லது Science 37க்கு அறிவித்தல் வழங்க வேண்டியிருப்பின் அல்லது அதனுடன் தொடர்பாடல் செய்ய வேண்டியிருப்பின் தயவுசெய்து Legal@Science37.com ஊடாக எங்களைத் தொடர்புகொள்ளவும்.