Skip to main content

தனியுரிமைக் கொள்கை

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 27, 2023

உலகளாவிய தனியுரிமைக் கொள்கையின் நோக்கம்

Science 37, Inc. (“Science 37,” “நாங்கள்,” அல்லதுஎங்கள்”) உங்கள் தகவல்களைப் பாதுகாக்க உறுதிகொண்டுள்ளது. அதனால் நாங்கள் உங்கள் தகவல்களை எப்படி செயலாக்குகிறோம் என்று நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க விரும்புகிறோம். இந்த Science 37 உலகளாவிய தனியுரிமைக் கொள்கையானது (“தனியுரிமைக் கொள்கை”) இதனை நீங்கள் காணும் எங்கள் இணையதளம் https://www.science37.com/; மருத்துவகச் சோதனைகள்; எங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் சமூக ஊடகங்கள் (“சமூக ஊடகப் பக்கங்கள்”); இந்தத் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் காண நாங்கள் உங்களுக்கு அனுப்பும் HTML வடிவமைப்பிலான மின்னஞ்சல் செய்திகள் அல்லது உங்களுக்கு அனுப்பும் பிற தகவல்கள்; மேலும் எங்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் மரபுவழி இடைத்தொடர்புகள் மூலம் தகவல்களை எப்படி சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம், மற்றும் வெளியிடுகிறோம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது, இணையதளம், சமூக ஊடகப் பக்கங்கள், மின்னஞ்சல்கள், மற்றும் ஆஃப்லைன் வணிக ஊடாடல்களை மொத்தமாக “சேவைகள்” என்கிறோம். 

நீங்கள் எங்கள் இணையதள அல்லது கைப்பேசி செயலித் தளத்தை மருத்துவகச் சோதனைக்காக பயன்படுத்தி வந்தால், Science 37 தளம் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படி செயலாக்குகிறோம் என்பதைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள, தயவு செய்து Science 37 Web-based and Mobile Application Platform Privacy Policy என்பதைக் காணவும். 

 

பொருளடக்க அட்டவணை

 

நாங்கள் சேகரிக்கும் தனிநபர் மற்றும் பிற தகவல்கள் மற்றும் நாங்கள் எப்படி அவற்றைச் சேகரிக்கிறோம்

 

நாங்கள் உங்கள் தகவல்களை எப்படி பயன்படுத்துகிறோம் மற்றும் செயலாக்குகிறோம்

 

உங்கள் தகவல்களை வெளியிடுதல்

 

ஆர்வ-அடிப்படையிலான மற்றும் மூன்றாம்-தரப்பு விளம்பரப்படுத்தல்

 

உங்கள் தகவல்களை இடமாற்றுதல் மற்றும் சேமித்தல்

 

தரவுகளைத் தக்கவைத்தல்

 

பாதுகாப்பு

 

நுண்ணுணர்வுத் தகவல்கள்

 

குழந்தைகள்

 

நேரடிச் சந்தைப்படுத்தல் தொடர்பான உங்கள் தெரிவுகள் 

 

உங்கள் உரிமைகள்

 

வெளிப்புற அல்லது மூன்றாம்-தரப்பு தொடர்பிணைப்புகள் 

 

தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

 

எங்களை தொடர்பு கொள்ள

 

ஈ.ஈ.ஏ மற்றும் யூ.கே. பற்றிய மேலதிகத் தகவல்கள்

 

கலிஃபோர்னியாவை பற்றிய கூடுதல் தகவல்கள்
















 

நாங்கள் சேகரிக்கும் தனிநபர் மற்றும் பிற தகவல்கள் மற்றும் நாங்கள் எப்படி வற்றைச் சேகரிக்கிறோம்

 

தனிநபர் தகவல்கள் 

 

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் "தனிநபர் தகவல்" என்பது உங்களை ஒரு தனியாள் என்று அடையாளம் காணப் பயன்படுத்தத்தக்க அல்லது ஒரு குறிப்பிட்ட இயற்கை நபரோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புப் படுத்தபடுகிற ஏதேனும் தகவலாகும். கீழ்க்கண்ட வகையான தனிநபர் தகவல்களை சேவைகள் சேகரிக்கின்றன: பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிற தொடர்புத் தகவல்கள்,வேலை கோரும் விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள சுயவிவரத் தகவல்கள், உடல் நிலை சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் ஐபி முகவரி. 

 

உங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க நாங்கள் தனிநபர் தகவல்களைச் சேகரிக்க வேண்டியுள்ளது. தேவையான தகவல்களை நீங்கள் தராவிட்டால், எங்களால் சேவைகளை வழங்க முடியாமல் போகலாம். வேறு நபர்களைப் பற்றிய அல்லது எங்கள் சேவை வழங்குநர் பற்றிய தனிநபர் தகவல்களை சேவைகளுக்காக நீங்கள் தந்தால் அவ்வாறு செய்வதற்கும் தனியுரிமைக் கொள்கைக்கேற்ப நாங்கள் அத்தகவல்களைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு என்று பொருள்படும். 

 

பொதுவாக சேவைகள் மூலமும்; வேலை விண்ணப்பச் செயலாக்கம் மூலமும்; மேலும் பிற மூலங்களிலிருந்தும் என பல வழிகளில் நாங்களும் எங்கள் சேவை வழங்குநர்களும் தனிநபர் தகவல்களைச் சேகரிக்கிறோம். 

 

சேவைகள் மூலமும் மற்றும் மருத்துவகச் சோதனையில் ஆர்வத்தைப் பதிவு செய்வதன் மூலமும்

 

சேவைகள் மூலம் நாங்கள் தனிநபர் தகவல்களைச் சேகரிக்கிறோம் - எடுத்துக் காட்டாக, ஒரு மருத்துவகச் சோதனைக்கு நீங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்கையில் அல்லது புகுபதிகை செய்கையில், சேவைகளைப் பெற கணக்குப் பதிவு செய்கையில், எங்கள் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்கையில், அல்லது ஒரு செய்தி இதழுக்காக புகுபதிகை செய்கையில்.

 

நீங்கள் ஒரு Science 37 மருத்துவகச் சோதனையில் இணைந்தால், மருத்துவகச் சோதனைச் செயலாக்கம் துவங்கும் போது தகவல் செயலாக்கம் பற்றிய விரிவான தகவலை நீங்கள் பெறுவீர்கள்- தனிநபர் தகவல் சேகரிப்பு உட்பட. 

 

வேலை வாய்ப்புகள்

 

எங்கள் இணையதளம் மூலம் வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பித்தால் Science 37-ல் உள்ள வேலைகளுக்கேற்ப உங்கள் திறமைகள் மற்றும் ஆர்வங்களை மதிப்பிடவும், ஒவ்வொரு நாட்டிற்குமான சட்டங்களின்படி அறிக்கைகள் தயாரிக்கவும் உங்கள் விண்ணப்பமும், நீங்கள் வழங்கும் மேலதிகத் தகவல்களும் பயன்படுத்தப் படலாம். உங்களுடன் தகவல்தொடர்பு கொள்வதற்கும், வேலை வாய்ப்புகள் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்கும் உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தக்கூடும்.

 

பிற மூலங்கள்

 

உங்கள் தனிநபர் தகவல்களை நாங்கள் பிற மூலங்களிலிருந்து பெறுகிறோம் - எடுத்துக்காட்டாக, பொதுவில் கிடைக்கும் தரவுத்தளங்கள், மருத்துவகச் சோதனை தேர்ந்தெடுப்பு கூட்டாளர்கள் மற்றும் இணைச் சந்தைக் கூட்டாளர்கள் ஆகியோர் தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது.

 

 பிற தகவல்கள்

 

"பிற தகவல்கள்" என்பன உங்கள் குறிப்பிட்ட அடையாளத்தை அல்லது அடையாளம் காணக்கூடிய தனி நபரை வெளியிடாத எத்தகவலையும் குறிப்பிடுகிறது. இவை மேலும், இணைய உலாவியின் வகை மற்றும் பயனில் இருக்கும் இயக்க முறைமை; நீங்கள் இயங்கும் இணையதளத்தின் களப்பரப்பு; உங்கள் வருகைகளின் எண்ணிக்கை; இணையதளத்தில் செலவிட்ட சராசரி நேரம்; பார்க்கப்பட்ட பக்கங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும். எடுத்துக்காட்டாக, நமது இணையதளத்தின் பொருத்தப்பாட்டினைக் கண்காணித்தல், அதனுடைய செயல்பாடு மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு நாங்கள் பிற தகவல்களைப் பயன்படுத்தலாம். 

 

பொருத்தமான சட்டத்தின் கீழ் வேறுவிதமாகச் செய்யக்கோரப்படுவதைத் தவிர, நாங்கள் எந்த நோக்கத்திற்காகவும் பிற தகவல்களை வெளியிடலாம். பொருத்தமான சட்டத்தின் கீழ் பிற தகவல்களை தனிநபர் தகவல்களாகக் கருத வேண்டுமென்று நாங்கள் கோரப்பட்டால் இந்தக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக நாங்கள் பிற தகவல்களை வெளியிடலாம். சில இடங்களில், நாங்கள் பிற தகவல்களை தனிநபர் தகவல்களோடு சேர்த்துப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்கையில், அவற்றைச் சேர்த்துப் பயன்படுத்தும் வரை அவற்றை நாங்கள் இணை தகவல்களாகவே கருதுவோம். 

 

நாங்கள் பிற தகவல்களை உங்களது உலாவி அல்லது சாதனம்; குக்கீகள்; கிளியர் gifs/வெப் பீகான்ஸ்; பகுப்பாய்வுகள்; மென்பொருள் உருவாக்கப் பொதிகள் (“SDKs”) மற்றும் மொபைல் விளம்பர அடையாளக்குறிகள்; மூன்றாம் தரப்பு பிளக்இன்கள்; மூன்றாம் தரப்பு ஆன்லைன் டிராக்கிங்; அடோப் ஃபிளாஷ் தொழில்நுட்பம்; பூகோளத்தளம் உள்ளிட்ட பல வழிகளில் சேகரிக்கிறோம். 



 

உங்களுடைய உலாவி அல்லது சாதனத்திலிருந்து

 

சில தகவல்கள் பெரும்பாலான உலாவிகள் மூலம், அல்லது உங்கள் சாதன வாயிலாக தானியங்கு முறையில் சேகரிக்கப்படுகிறது. அவை ஊடக அணுகல் கட்டுப்பாடு (MAC) முகவரி, கணினி வகை (Windows அல்லது Mac), திரைத் தெளிவுத்திறன், ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் மற்றும் பதிப்பு, சாதனத் தயாரிப்பாளர் மற்றும் மாதிரி, மொழி, இணைய உலாவி வகை மற்றும் அதன் பதிப்பு, மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சேவைகளின் பெயர் மற்றும் பதிப்பு போன்றனவாகும். சேவைகள் சரியாக இயங்குவதை உறுதிப்படுத்த நாங்கள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறோம். 

 

 

குக்கீகள் (உங்கள் கணினியில் தானாகச் சேமிக்கப்படும் தகவல்கள்)

 

எங்கள் இணையதளத்தில் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் இணைய உலாவியால் உங்கள் கணியில் சேமிக்கப்படும் சிறிய கோப்புகளே குக்கீகளாகும். நீங்கள் முன்பு குறித்த இணையதளத்துக்கு வருகை தந்தீர்களா என்பதை அறிய குக்கீ இணையதளத்தை அனுமதிக்கிறது. மேலும் அது பயனாளி தேர்வுகளையும் பிற தகவல்களையும் சேமித்து வைக்கலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் இணையதளத்தினை தற்போதும் இதுவரையும் பயன்படுத்திய (நீங்கள் பார்த்த பக்கங்கள் மற்றும் நீங்கள் தரவிறக்கிய கோப்புகள் உள்ளிட்ட) தகவல்கள், உங்கள் கணினியின் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் உலாவியின் வகை, உங்கள் இணைய சேவை வழங்குநர், உங்கள் செயற்களப் பெயர் மற்றும் இணைய சேவை வழங்குநரின் முகவரி, உங்களுடைய பொது பூகோள இருப்பிடம், எங்கள் இணையதளத்துக்கு வரும்முன்பு நீங்கள் வருகைதந்த இணையதளம், மற்றும் எங்கள் இணையதளத்தை விட்டுச்செல்ல நீங்கள் பயன்படுத்திய தொடர்பிணைப்பு ஆகியவற்றைச் சேகரிக்க அல்லது சேமித்து வைக்க குக்கீகள் பயன்படுத்தப்படலாம். உங்கள் கணினியில் குக்கீகள் இருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள் அனைத்து குக்கீகளை மறுக்கும் விதமாகவோ, குக்கீகள் சேமிக்கப்படும்போது அதை ஏற்கவா வேண்டாமா என்று அனுமதிக்கும் விதமாகவோ நீங்கள் உங்கள் உலாவியை அமைக்கலாம். உங்கள் கணினியிலிருந்து நீங்களே குக்கீகளை அகற்றலாம். அதேவேளையில், நீங்கள் குக்கீகளை தடுக்கவோ, அகற்றவோ தேர்ந்தெடுத்தால் இணையதளத்தின் சில அம்சங்கள் சரியாக செயல்படாமல் போகலாம்.

 

Science 37 குக்கீகளைப் பயன்படுத்துவதை விரிவாக அறிய, தயவுசெய்து Science 37 Cookie Policy என்பதைப் பார்க்கவும்.

 

கிளியர் Gifs

 

எங்கள் இணையதளத்தில் எந்த உள்ளடக்கம் சிறந்தது என்று எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, சிறந்த உள்ளடக்க மேலாண்மைக்காக இ-டேக்ஸ் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற மற்ற தொழில் நுட்பங்களோடு, கிளியர் gifs என்ற தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறோம் (இது வெப் பீகான்ஸ், வெப் பக்ஸ் மற்றும் பிக்சல் டேக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது). கிளியர் gifs என்பவை குக்கீகளைப் போலவே பயனர்களின் இணைய அசைவுகளைக் கவனிக்கும் சிறிய வரைகலைகளாகும். பயனர்களின் கணினியில் வன்பொருளில் குக்கீகள் சேமிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு கால அளவின் அளவே இருக்கும் கிளியர் gifs புலனாகா வகையில் இணையப் பக்கங்களில் கோர்க்கப்பட்டிருக்கும். கிளியர் gifs, இ-டேக்ஸ், ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றால் சேகரிக்கப்படும் தகவல்களை நாங்கள் தனிநபர் தகவல்களோடு இணைப்பதில்லை. கிளியர் gifs மற்றும் பிற தொழில் நுட்பங்களின் Science 37 பயன்பாடு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள Science 37 Cookie Policy - ஐப் பர்க்கவும்.

 

பகுப்பாய்வுகள்

 

மேலே விவாதிக்கப்பட்ட தானே சேகரிக்கப்படும் தகவல்களைப் பெற சில மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் கூட்டுறவு வைத்து பகுப்பாய்வு, தணிக்கை, ஆராய்ச்சி மற்றும் அறிக்கையாக்கத்தில் ஈடுபடுகிறோம். இந்த மூன்றாம் தரப்பினர் வெப் லாகுகள் அல்லது வெப் பீகான்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் கணினியிலோ அல்லது பிற சாதனகளிலோ குக்கீகளை அமைத்து அணுகலாம். குறிப்பாக, மேலே சொன்ன நோக்கங்களுக்காக சில தகவல்களைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்ய இணையதளமானது Google Analytics- ஐ பயன்படுத்துகிறது. Google Analytics குக்கீகளைப் பயன்படுத்துவதிலிருந்து நீங்கள் இங்குசொடுக்கி விலகலாம். 

 

SDK-கள் மற்றும் மொபைல் விளம்பர அடையாளங்கள்

 

உங்கள் நடவடிக்கைகளைப் பற்றி நாங்களும் எங்கள் சேவை வழங்குநர்களும் தகவல் திரட்ட சில மூன்றாம் தரப்பு SDK-களை எங்கள் சேவைகள் உள்ளடக்கியிருக்கலாம். மேலும், சில மொபைல் சாதனங்கள் மறுநிர்மாண விளம்பர அடையாளங்களுடன் (ஆப்பிளின் IDFA மற்றும் கூகுளின் விளம்பர அடையாளம்) வருகின்றன. இவை குக்கீகள் மற்றும் பிக்சல் டேகுகளைப் போன்று விளம்பர நோக்கங்களுக்காக உங்கள் மொபைல் சாதனத்தை அடையாளம் காண எங்களையும் எங்கள் சேவை வழங்குநர்களையும் அனுமதிக்கின்றன. 

 

மூன்றாம்-தரப்பு பிளக்இன்கள்

 

சமூக ஊடகக் கம்பெனிகள் உட்பட மற்ற நிறுவனங்களின் பிளக்இன்களை எங்கள் இணையதளம் கொண்டிருக்கலாம் (எ.கா., ஃபேஸ்புக்கின் “Like” பொத்தான்). இந்த பிளக்இன்கள் நீங்கள் பார்த்த பக்கங்களின் தகவல்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து, நீங்கள் அந்த பிளக்இன்களைச் சொடுக்காமலே அவற்றை உருவாக்கிய கம்பெனிகளுக்கு அந்தத் தகவல்களைப் பகிரலாம். இந்த மூன்றாம்-தரப்பு பிளக்இன்கள் தனியுரிமைக் கொள்கைகளாலும் அவற்றை உருவாக்கிய நிறுவனங்களின் விதிமுறைகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன. 

 

மூன்றாம்-தரப்பு ஆன்லைன் டிராக்கிங்

 

சில மூன்றாம்-தரப்பினருடன் நாங்கள் கூட்டுறவு வைத்து இந்தப் பகுதியில் விளக்கப்பட்ட சில தகவல்களை நாங்கள் சேகரித்து, பகுப்பாய்வு செய்து பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் இணையதளத்திலும், மின்னஞ்சல்களிலும் குக்கீகளையோ, வெப் பீகான்களையோ பொருத்த நாங்கள் மூன்றாம்-தரப்பினரை அனுமதிக்கலாம். இந்தத் தகவல்கள் இணையதளப் பகுப்பாய்வுகள் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையிலான விளம்பரம் செய்தல் உட்பட பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப் படலாம். இதைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள "பகுப்பாய்வுகள் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையிலான விளம்பரம் செய்தல்" என்ற பகுதியை கீழே பார்க்கவும்.

 

ஒன்றிணைத்த மற்றும் அடையாளம் நீக்கிய தகவல்கள்

 

சேவைகளின் பயனர்கள் குறித்த ஒன்றிணைத்த மற்றும் அடையாளம்நீக்கிய தகவல்களை நாங்கள் அவ்வப்போது சேகரித்துப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த ஒன்றிணைத்த அல்லது அடையாளம்நீக்கிய தகவல்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணாது.

 

நாங்கள் உங்கள் தகவல்களை எப்படி பயன்படுத்துகிறோம் மற்றும் செயலாக்குகிறோம்

 

நாங்களும், எங்கள் சேவை வழங்குநர்களும் நாங்கள் சேகரிக்கும் தனிநபர் தகவல்களை கீழ்க்கண்ட நோக்கத்திற்காக பயன்படுத்துகிறோம்.

 

  • சேவைகளின் செயல்பாட்டை வழங்குதல் மற்றும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுதல்.

 

- சேவைகளின் செயல்பாட்டை உங்களுக்கு வழங்க, அதாவது, உங்கள் பதிவு செய்யப்பட்ட கணக்கிற்கு அணுகல் தன்மையை ஏற்பாடு செய்வது; மருத்துவகச் சோதனைகள் நடத்துவது; உங்கள் கேள்விகளுக்கு அல்லது சேவைகளை பற்றிய உங்கள் ஐயப்பாடுகளுக்கு பதில் அளிப்பது; அல்லது வாடிக்கையாளர் சேவையை வழங்குவது. 

- எங்களுடைய ஓர் ஆன்லைன் படிவம் மூலம் அல்லது வேறு விதமாக நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் விசாரணைகளுக்குப் பதிலளித்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற - எடுத்துக்காட்டாக, சேவைகள் தொடர்பான கேள்விகள், பரிந்துரைகள், பாராட்டுக்கள் மற்றும் புகார்களை நீங்கள் எங்களுக்கு அனுப்பும்போது.

- உங்கள் நடவடிக்கைகளை நிறைவாக்க, உங்கள் தகவல்களைச் சரிபார்க்க, மற்றும் சம்பந்தப்பட்ட பயன்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவையினை உங்களுக்கு வழங்க.

- எங்களுடைய விதிமுறைகள், நிபந்தனைகள், கொள்கைகள் ஆகியவற்றில் மாற்றங்களை பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, மேலும் எங்களுடனான உங்களுடைய ஏதேனும் ஓர் ஒப்பந்தத்தில் விதிகளை நிறைவாக்க. 

- உறுதிப்படுத்தல்கள், கணக்குத் தகவல்கள், அறிவிப்புக்கள், மற்றும் இதுபோன்ற செயல்பாட்டுத் தகவல்தொடர்புகளை சேர்ப்பிக்க.

- சேவைகளின் மூலம் நீங்கள் மற்றொரு நபருக்கு தகவல் அனுப்ப விரும்பினால், அவ்வாறு செய்ய உங்களை அனுமதிக்க. 

 

உங்களுடனான எங்கள் ஒப்பந்ததாரர் உறவை நிர்வகிக்க மற்றும்/அல்லது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற நாங்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

 

  • எங்களுடைய செய்தி இதழ் மற்றும்/அல்லது பிற சந்தைப்படுத்துதல் ஏடுகளை உங்களுக்கு வழங்குதல் மற்றும் சமூகப் பகிர்வைச் சாத்தியமாக்குதல்.

 

- எங்களுடைய சேவைகள் மற்றும் உங்களுக்கு ஆர்வமுடைய விஷயங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய சந்தை தொடர்பான மின்னஞ்சல்களை உங்களுக்கு அனுப்ப. இவை செய்தி இதழ்கள், புதுப்பித்தல்கள் அல்லது மின்னஞ்சல்கள் அடங்கிய பிற செய்தித் தொடர்புகள் போன்றனவாகும். 

- நீங்கள் தேர்ந்தெடுத்து செயல்படுத்த விரும்பும் சமூகப் பகிர்வுச் செயல்பாட்டை சாத்தியமாக்க.

 

உங்கள் சம்மதத்துடன் அல்லது எங்களுக்கு சட்டப்பூர்வ நலன்கள் இருக்குமிடத்தில் நாங்கள் இந்த

நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

 

  • வணிக அறிக்கை நோக்கத்திற்காக தனிநபர் தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் தனிப்பட்ட ரீதியான சேவைகளை வழங்குதல். 

 

- எங்களுடைய மின்னணு உள்ளடக்கம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய ஒருமித்த தகவல் அறிக்கைகளைத் தயாரிக்க பயனர்களின் தேர்வுகளைப் பகுப்பாய்வு செய்ய அல்லது யூகிக்க. இதன் மூலம் நாங்கள் எங்கள் சேவைகளை மேம்படுத்த முடியும்.

- பயனர் அனுபவத்தையும் உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளின் தரத்தையும் பொதுவாக மேம்படுத்த. இணையதளத்தையும், அதில் பயனர் அனுபவத்தையும் மேம்படுத்துவது இதில் அடங்கும்.

- உங்களுடைய ஆர்வங்களையும் முன்னுரிமைகளையும் நாங்கள் சிறந்த முறையில் புரிந்து கொள்ள, இதன் மூலம் உங்களுடனான எங்கள் ஊடாடல்களைத் தனிப்பட்ட ரீதியானதாக்கி, உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற தகவல்களையும்,பிற வெகுமதிகளையும் எங்களால் உங்களுக்கு வழங்க முடியும்.

- உங்கள் தேர்வுகளை சிறந்த முறையில் புரிந்து கொண்டு, உங்களுக்குப் பொருத்தமாகவும் ஆர்வமாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்பக்கூடிய சேவைகளின் மூலம் உள்ளடக்கத்தை உங்களுக்குச் சேர்த்தல். 

 

நாங்கள் தனிப்பட்ட ரீதியான சேவைகளை எங்கள் சட்டப்பூர்வ நலன்கள் மற்றும் பொருந்தும் சட்டங்களின் படியான உங்கள் சம்மதத்தின் அடிப்படையில் வழங்குவோம். 

 

  • ஒன்றிணைத்தல் மற்றும்/அல்லது தனிநபர் தகவல்களை  பெயர் நீக்கம் செய்தல்.

 

  • நாங்கள் தனிநபர் தகவல்களை ஒருங்கிணைக்கலாம் அல்லது அனாமதேயமாக்கலாம். இதன் மூலம் அவை மேற்கொண்டு தனிநபர் தகவலாகக் கருதப்படாது. எங்கள் பயன்பாட்டிற்காக வேறு தகவல்களை உருவாக்க நாங்கள் இப்படி செய்கிறோம். அவை உங்களையோ வேறு எந்த தனி நபரையோ அடையாளப்படுத்தாது என்பதால் அவற்றை நாங்கள் எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம். 

 

  • எங்கள் வணிக நோக்கங்களை நிறைவேற்றுதல்.

 

  • தரவுப் பகுப்பாய்விற்காக - எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த (எ.கா., சேவைகள் குறித்து கூடுதல் இணையதளப் பகுப்பாய்வு மற்றும் ஆய்வினைச் செயல்படுத்துதல்). 
  • தணிக்கை செய்வதற்காக, திட்டமிட்டபடி எங்கள் அகச் செயல்முறைகள் செயல்படுகின்றன என்பதைச் சரி பார்ப்பதற்கும், சட்டமுறை, இயங்குமுறை மற்றும் ஒப்பந்த தேவைகளை நிறைவு செய்யவும்.
  • மோசடி தவிர்ப்பு மற்றும் மோசடி பாதுகாப்புக் கண்காணிப்பு நோக்கங்களுக்காக - எடுத்துக்காட்டாக, சைபர் தாக்குதல்களையும் அடையாளத்திருட்டு முயற்சிகளையும் கண்டுபிடித்து தவிர்ப்பதற்காக.
  • புதிய உற்பத்திப் பொருள்களையும் சேவைகளையும் உருவாக்க அல்லது எங்கள் நடப்பு சேவைகளை மேம்படுத்த. 
  • எங்கள் நடப்பு உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் திறனுயர்த்தி, மேம்படுத்தி, பழுது நீக்கி, பராமரித்து, மாற்றியமைக்க. மேலும் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி நடவடிக்கைகளை மேற்கொள்ள.
  • பயன்பாட்டு போக்குகளை அடையாளம் காண - எடுத்துக்காட்டாக, எங்களுடைய சேவைகளில் எந்த அம்சங்கள் பயனர்களுக்கு அதிகம் பிடித்திருக்கின்றன என்று புரிந்து கொள்ள. (எ. கா., இணையதளத்திற்கு வருகை தருவதை அறிந்து எண்ணிப்பார்க்க, மேலும் இணையதளத்தையும் அதன் பல்வேறு அம்சங்களையும் அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று பகுப்பாய்வு செய்ய).
  • எங்கள் தேர்ந்தெடுப்புப் பிரச்சாரங்களில் செயல்பாட்டைத் தீர்மானிக்க, இதன் மூலம் நாங்கள் பயனர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப பிரச்சாரங்களை உருவாக்க முடியும். 
  • எங்கள் வணிக நடவடிக்கைகளை செயல்படுத்தி விரிவாக்க - எடுத்துக்காட்டாக எங்களுடைய சேவைகளில் எந்த அம்சங்கள் பயனர்களுக்கு அதிகம் பிடித்திருக்கின்றன என்று புரிந்து கொள்ள. இதன் மூலம் பயனர்களின் தேவைகளை நிறைவு செய்ய நாங்கள் எங்கள் ஆற்றல்களை ஒருமுகப்படுத்த முடியும். 
  • சட்டப்படியான மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளை நிறைவு செய்ய.
  • எங்கள் வணிகத்தை நிர்வகிக்க. 

 

உங்களுடனான எங்கள் ஒப்பந்த உறவை நிர்வகிக்கவும், சட்டப்பூர்வக் கடமைகளை நிறைவேற்றவும், எங்களுடைய சட்ட நலன்களின் அடிப்படையில் நாங்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் .

வேறு பல சூழ்நிலைகளில் நாங்கள் சேகரிக்கும் தகவல்களோடு இணையதளத்தில் இருந்து பெறும் தகவல்களை நாங்கள் ஒருங்கிணைக்கலாம். அவ்வாறு செய்யும்போது இந்தத் தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்புடைய விதமாக நாங்கள் அந்த ஒருங்கிணைந்த தகவல்களைக் கையாள்கிறோம். 

உங்கள் தகவல்களை வெளியிடுதல்

 

எங்கள் மருத்துவகச் சோதனைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் மூன்றாம் தரப்பினருக்கும்; வேறு மூன்றாம்-தரப்புச் சேவை வழங்குநர்களுக்கும்; மற்றும் பல வழிகளில் நாங்கள் உங்கள் தனிநபர் தகவல்களை வெளியிடுகிறோம். நீங்களும் தாமாகவே உங்கள் தனிநபர் தகவல்களை வெளியிடலாம்.

 

மருத்துவகச் சோதனைகள் 

 

எங்கள் மருத்துவகச் சோதனைகளில் நாங்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பினருக்கு அல்லது தனியுரிமைக் கொள்கைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் வேறு சேவைகளுக்கு உங்களிடம் இருந்து சேகரித்த அல்லது நீங்கள் வழங்கிய தனிநபர் தகவல்களை நாங்கள் வெளியிடலாம். அத்தகைய மூன்றாம் தரப்பினர் யாரும் ஒப்பந்த விதிமுறைகளின்படி அந்த தனிநபர் தகவல்களை வெளியிடாமல் இருக்கவும், எந்த நோக்கங்களுக்காக நாங்கள் வழங்குகிறோமோ அந்த நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தவும் கடமைப்பட்டவர்கள். 

 

மூன்றாம்-தரப்புச் சேவை வழங்குநர்கள்

 

எங்கள் சார்பில் சேவைகளை செயல்படுத்தும் மூன்றாம்-தரப்புச் சேவை வழங்குநர்களை Science 37 பயன்படுத்துகிறது. இந்த மூன்றாம் தரப்பினரில் வெப்-ஹோஸ்டிங் நிறுவனங்களும், மின்னஞ்சல் விற்பனையாளர்களும், மற்றும் பகுப்பாய்வு வழங்குநர்களும் அடங்குவர். இந்தச் சேவை வழங்குநர்கள் மேற்சொன்ன நோக்கங்களை அடைய எங்களுக்கு உதவுவதற்காக, உங்களை தனிப்பட்ட முறையில் அறியும் தகவல்கள் உள்ளிட்ட உங்கள் தகவல்களை சேகரிக்கலாம் மற்றும்/அல்லது பயன்படுத்தலாம். 

 

சேவைகளுக்கான உங்கள் கோரிக்கைகளை நிறைவு செய்யும்போது அவசியம் ஏற்பட்டால் நாங்கள் உங்கள் தகவல்களை மூன்றாம் தரப்பினரோடு பகிரலாம்; நீங்கள் தொடங்கிய ஒரு நடவடிக்கையை நிறைவு செய்யவோ; நீங்கள் எங்களுடன் அல்லது எங்கள் கூட்டாளர்களுடன் கொண்டிருக்கும் ஓர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நிறைவு செய்யவோ; அல்லது எங்கள் தொழிலை நிர்வகிக்கவோ நாங்கள் இவ்வாறு செய்யலாம். 

 

 

மற்ற பயன்பாடுகளும் வெளிப்படுத்தல்களும்

 

தேவைக்கேற்பவோ பொருத்தமாகவோ நாங்கள் உங்கள் தனிநபர் தகவல்களை பயன்படுத்தவும் வெளியிடவும் செய்யலாம், குறிப்பாக அவ்வாறு செய்ய எங்களுக்கு சட்டபூர்வ கடமை அல்லது சட்ட நலன் இருக்கும்போது, அவையாவன: 

 

  • நீங்கள் வசிக்கும் ஒரு நாட்டிற்கு வெளியே இருப்பது உள்ளிட்ட ஓர் அரசின் அல்லது ஒழுங்குமுறையின் கோரிக்கைக்கு பதிலளிப்பது உட்பட நீதிமன்ற உத்தரவுக்கு, சட்டத்திற்கு மற்றும் சட்டச் செயலாக்கங்களுக்கு ஒத்துழைக்க. 

 

  • பொது மற்றும் அரசு ஆணையங்களுடன் ஒத்துழைக்க, ஒரு கோரிக்கைக்குப் பதில் தருவது, அவசியமானது அல்லது பொருத்தமானது என நாங்கள் நம்புகிற தகவல்களை வழங்குவது (நீங்கள் வசிக்கும் நாட்டின் வெளியில் உள்ள அதிகாரிகளும் இவற்றில் அடக்கம்). 

 

  • சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒத்துழைக்க, எடுத்துக்காட்டாக, சட்டச் செயலாக்கக் கோரிக்கைகளுக்கு மற்றும் உத்தரவுகளுக்கு நாங்கள் பதில் தரும்போது அல்லது முக்கியம் என்று நாங்கள் நம்பும் தகவல்களை வழங்கும் போது என்பது இதில் அடங்கும்.

 

  • மற்ற சட்டபூர்வக் காரணங்களுக்காக - எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை செயலாக்க, அல்லது எங்களுடைய மற்றும்/அல்லது எங்களுக்கு வேண்டியவர்களான உங்களின் அல்லது மற்றவர்களின் உரிமைகளை, தனியுரிமையை, பாதுகாப்பை, சொத்துக்களைப் பாதுகாக்க ஆகியன இதில் அடங்கும்.

 

  • ஒரு விற்பனை அல்லது வணிக நடவடிக்கை தொடர்பில். மறுசீரமைப்பு, இணைப்பு, விற்பனை, கூட்டு வணிகம், திட்டப்பணி, இடமாற்றுதல், அல்லது எங்கள் வணிகம், சொத்துக்கள், பங்குகள் ஆகியவற்றின் அனைத்து அல்லது சில பகுதிகளைக் கையளித்தல் (திவால் அல்லது அதுபோன்ற நிலைமைகளையும் இது உள்ளடக்கியது) போன்ற நிலைமைகளில் நாங்கள் உங்கள் தனிநபர் தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிடவோ, இடமாற்றுவதில் எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது.

உங்கள் சொந்த வெளிப்படுத்தல்கள்

 

சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தனிநபர் தகவல்களை வெளியிடுவதைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் பின்வருவன அடங்கும்: தகவல் பலகைகள் மூலம், அரட்டையின் மூலம், அறிமுகப் பக்கங்கள் மூலம், பிளாக்குகள் மூலம் மற்றும் நீங்கள் தகவல்களையும் மற்றும் உள்ளடக்கத்தையும் வெளியிட இயலும் பிற சேவைகள் மூலம் (எந்த வரம்புமின்றி நமது சமூக ஊடகப் பக்கங்கள் உட்பட) வெளியிடுவது. இந்தச் சேவைகள் மூலம் நீங்கள் வெளியிடும் எந்த தகவலும் பொதுமைப்படுத்தப்பட்டு மற்ற பயனர்களுக்கும், அனைவருக்கும் கிடைக்கலாம் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். உங்கள் சமூகப் பகிர்வு நடவடிக்கையின் மூலமான வெளிப்படுத்தலும் இதில் அடங்கும்.

 

ஆர்வ-அடிப்படையிலான மற்றும் மூன்றாம்-தரப்பு விளம்பரப்படுத்தல்

 

ஆர்வ-அடிப்படையிலான விளம்பரமிடலில் உங்களைப் பற்றிய மற்றும் இணைப்பில் பயன்படும் உங்கள் கணிப்பான் கருவிகளை பற்றிய தகவல்களைச் சேகரிக்க இணையதளமானது மூன்றாம் தரப்பு கண்டறி முறைமையை செயல் படுத்தலாம். எடுத்துக்காட்டாக, முகநூல் போன்ற மூன்றாம் தரப்பினர் உங்களுக்கு வரும் விளம்பரத்தை பார்க்க இணையதளத்திற்கு நீங்கள் வருகை தந்தீர்கள் என்ற விவரத்தைப் பயன்படுத்தலாம். மேலும், மூன்றாம் தரப்பு விளம்பர வலை அமைவுகள் உங்கள் பொதுவான இணைய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் இடுவதற்கு, எங்கள் இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவது பற்றிய விவரங்களைப் பயன்படுத்தலாம். ஆர்வ-அடிப்படையிலான, தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மை உள்ளிட்ட, விளம்பரச் செயல்முறைத் தகவல்களுக்கு Network Advertising Initiative என்ற இணையதளத்திற்கு அல்லது Digital Advertising Alliance என்ற இணையதளத்திற்கு வருகை தரவும். 

 

மூன்றாம் தரப்பினரின் ஆன்லைன் டிராக்கிங் பொறிமுறையின் பயன்பாடு அந்த மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதேயன்றி இந்த தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதல்ல. உங்கள் கணினியிலோ அல்லது மற்ற கருவிகளிலோ மூன்றாம் தரப்பினர் குக்கீகளை அமைத்து செயல்படுத்துவதைத் தடுக்க விரும்பினால், உங்கள் உலாவியில் நினைவவிகளைத் தடுக்குமாறு நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். வலைப்பின்னல் விளம்பர முனைப்பில் நிறுமங்களின் இலக்கு விளம்பரங்களில் இருந்து நீங்கள் விலக விரும்பினால் இங்கு சொடுக்கவும், அல்லது மின்னணு விளம்பர கூட்டணிகளில் கலந்துகொள்ளும் நிறுவனங்களாக இருந்தால் இங்கு சொடுக்கவும். தற்போது எங்கள் இணையதளம் உலாவியின் தலைப்புகளில் “டிராக் செய்யாதே” என்பதற்கு உடன்படாவிட்டாலும், இந்த மூன்றாம்-தரப்பு கண்டறிதல்களை நீங்கள் மேற்சொன்ன வழிகளில் மட்டுப்படுத்தலாம். 

 

நாங்கள் குக்கீகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்றும், நீங்கள் குக்கீ தேர்வுகளை எப்படி நிர்வகிக்கலாம் என்றும் Cookie Policy- க்கு வருகை தந்து மேலதிக விவரம் தெரிந்துகொள்ளலாம்.

 

உங்கள் தகவல்களை இடமாற்றுதல் மற்றும் சேமித்தல்

 

Science 37, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்ஏஞ்சல்ஸில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ளது. எங்களுக்கு அலுவலகங்கள் இருக்கிற அல்லது நாங்கள் சேவை வழங்குநர்களைப் ஈடுபடுத்துகிற எந்த நாட்டிலும் உங்களுடைய தனிநபர் தகவல்கள் சேமிக்கப்பட்டு செயற்படுத்தப்படலாம். சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தகவல்கள் நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியேயுள்ள, உங்கள் நாட்டிலிருந்து வேறுபட்ட தகவல் பாதுகாப்பு விதிகளைக் கொண்ட, அமெரிக்கா உள்ளிட்ட வேறு எந்த நாட்டிற்கும் மாற்றப்படலாம் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சில சந்தர்ப்பங்களில் அந்த நாடுகளின் நீதிமன்றங்கள், சட்ட அமலாக்கல் முகமைகள், ஒழுங்குமுறை முகமைகள், அல்லது பாதுகாப்பு ஆணையங்களுக்கு உங்கள் தனிநபர் தகவல்களை அணுக உரிமை வழங்கப்படக்கூடும்.

 

ஈ.ஈ.ஏ, சுவிட்சர்லாந்து மற்றும் யூ.கே. பற்றிய கூடுதல் தகவல்கள்

 

சில ஈ.ஈ.ஏ-அல்லாத நாடுகளை ஐரோப்பிய கமிஷன், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்தால் போதிய தகவல் பாதுகாப்பு வழங்கும் நாடுகளாக தங்களுடைய மதிப்பீடுகளின் படி அங்கீகரித்துள்ளது (போதிய பாதுகாப்பு உள்ள நாடுகளின் முழு பட்டியல் இங்கு உள்ளது). ஈ.ஈ.ஏ, சுவிட்சர்லாந்து மற்றும் யூ.கே. ஆகிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு போதுமானதாக இல்லாத நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய, உங்கள் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க ஐரோப்பிய கமிஷன் பின்பற்றும் பொது ஒப்பந்த விதிமுறைகள் போன்ற போதிய ஏற்பாடுகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இந்த அளவுகோல்களின் நகலைப்பெற நீங்கள் கீழே உள்ள “How to Contact Us” என்ற பகுதியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 

 

உங்கள் தனிநபர் தகவல்களை இடமாற்றுதல் அல்லது சேமித்தல் பற்றிய தனியுரிமை சம்பந்தமான கேள்விகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், தயவுசெய்து Privacy@Science37.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். 

 

தரவுகளைத் தக்கவைத்தல்

 

உங்கள் தனிநபர் தகவல்களை இந்தத் தனியுரிமைக் கொள்கையில் கூறப்பட்டுள்ள படி மற்றும்/அல்லது பொருத்தமான சட்டங்களின் படியும் தேவைப்படுகிற காலஅளவு வரை அல்லது எந்த நோக்கங்களுக்காக பெறப்படுகின்றனவோ அதன் அடிப்படையிலும் உங்கள் தகவல்களை நாங்கள் தக்க வைத்துக்கொள்கிறோம். 

 

நாங்கள் தக்க வைத்துக்கொள்ளும் காலம் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது:

 

உங்களுக்கு எங்களோடு உள்ள தற்போதைய உறவின் கால அளவு அல்லது உங்களுக்கு சேவைகளை வழங்கிய காலஅளவு (எடுத்துக்காட்டாக, எங்களோடு உங்களுக்கு கணக்கு இருக்கும் வரை அல்லது சேவைகளைப் பயன்படுத்தும் வரை).

நாங்கள் உட்பட்டு இருக்கும் ஏதேனும் சட்டப்பூர்வப் பொறுப்பு இருந்தால் (எடுத்துக்காட்டாக, உங்கள் நடவடிக்கைகள் பற்றிய பதிவுகளை நாங்கள் அழிக்கும் முன்பாக, அவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்குமாறு சில சட்டங்கள் எங்களைக் கோருகின்றன); அல்லது

எங்கள் சட்ட நிலைகளின் அடிப்படையில் வைத்திருப்பது அவசியம் என்றால் (வரையறைகள், வழக்குகள் அல்லது ஒழுங்குமுறை விசாரணைகளுக்கான சட்டங்களின்படி போன்றவை). 

 

 

பாதுகாப்பு

 

Science 37 நீங்கள் எங்களோடு பகிரும் தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்புடையது.

 

அங்கீகரிக்கப்படாத அணுகல், பயன்பாடு அல்லது வெளிப்படுத்துவதில் இருந்து உங்கள் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க நாங்கள் பொருத்தமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், மற்றும் நிறுவன ரீதியான அளவுகோல்களின் சேர்மானத் தொகுதியை பயன்படுத்துகிறோம். துரதிருஷ்டவசமாக, எந்த ஒரு தகவல் அனுப்புதல் அல்லது சேமிப்பு முறைமையும் 100% பாதுகாப்பானது என்று உறுதி அளிக்க முடியாது. உங்களுடனான ஊடாடல் பாதுகாப்பானது இல்லை என்று நம்புவதற்கு உங்களுக்கு காரணம் இருந்தால், தயவுசெய்து “How to Contact Us” என்ற கீழ்வரும் பகுதியில் உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.

 

நுண்ணுணர்வுத் தகவல்கள்

 

நாங்கள் கோருகிற இடங்களைத் தவிர, சேவைகளின் மூலமாக நீங்கள் எங்களுக்கு நுண்ணுணர்வுத் தகவல்களை (எடுத்துக்காட்டிற்கு, சமூகப் பாதுகாப்பு எண், இன அல்லது தேசிய இன மூலத்தகவல்கள், அரசியல் கருத்துக்கள், மத அல்லது மற்ற நம்பிக்கைகள், பயோமெட்ரிக்ஸ் அல்லது மரபணுத் தன்மைகள், கிரிமினல் பின்னணி, அல்லது தொழிற்சங்க உறுப்பினர் தகுதி) அனுப்பவோ, வெளிப்படுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

குழந்தைகள்

 

Science 37-ன் சேவைகள், பதினெட்டு (18) வயதிற்குக் கீழான தனிநபர்களுக்கு உகந்தது அல்ல, 16 வயதுக்கு குறைந்தவர்கள் இடம் இருந்து, சட்டப்பூர்வத் தேவைகளுக்காக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சம்மதமின்றி அவர்களுடைய தனிநபர் தகவல்களை நாங்கள் தெரிந்தே சேகரிப்பது இல்லை. 

 

நேரடிச் சந்தைப்படுத்தல் தொடர்பான உங்கள் தெரிவுகள் 

 

சந்தைப்படுத்தல் நோக்கங்களை நிறைவு செய்தல் உட்பட உங்கள் தனிநபர் தகவல்களைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் சம்பந்தமான தெரிவுகளை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம்.

 

எதிர்காலத்தில் எங்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் எந்த நேரத்திலும் “unsubscribe” தொடுப்பை சொடுக்கி அல்லது Privacy@Science37.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம் பதிவை விலக்கிக் கொள்ளலாம்.

 

Science 37, பகுதி அளவில் விலகும் விருப்பத்தேர்வு ஒன்றையும் தருகிறது. இந்த விருப்பத்தேர்வு நீங்கள் எந்தத் தகவல் கூறுகளை வழங்கலாம் என்றும், வழங்க வேண்டாம் என்றும் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. சில தகவல் கூறுகளை வழங்குவதிலிருந்து விலகுவது பற்றி மேலும் தெரிந்து கொள்ள, Privacy@Science37.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். 

 

Science 37 உங்கள் சம்மதம் இல்லாமல் மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் நேரடிச் சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் தனிநபர் தகவல்களைப் பகிர்வது இல்லை. 

 

Science 37 செயல்படுத்துவதற்கு உகந்த முறையில் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு உங்கள் கோரிக்கை(களை) விரைந்து நிறைவு செய்ய முயற்சி செய்யும். நீங்கள் எங்களிடம் இருந்து சந்தைப்படுத்தல் தொடர்பான மின்னஞ்சல்களை பெறுவதில் இருந்து விலகிக் கொண்டால், அதற்கு மேலும் நாங்கள் முக்கிய நிர்வாகத் தகவல்களை உங்களுக்கு அனுப்பலாம், அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள முடியாது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.

 

உங்கள் உரிமைகள்

 

நீங்கள் தனிநபர் தகவல்களை அணுகவோ, திருத்தவோ, புதுப்பிக்கவோ, மறைக்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது அழிக்கவோ விரும்பினால், தனிநபர் தகவல்களின் செயலாக்கத்தை நீங்கள் ஆட்சேபிக்கலாம் அல்லது அதிலிருந்து நீங்கள் வெளியேறலாம், அல்லது மற்றொரு நிறுமத்திற்கு வழங்குவதற்காக (பொருத்தமான சட்டத்தால் உங்களுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கும் வரை) நீங்கள் தனிநபர் தகவல்களின் நகலை பெற விரும்பிக் கோரினால், இந்த தனியுரிமைக் கொள்கையின் இறுதியில் காணப்படும் தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தி தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும். சட்டத்திற்குட்பட்ட உங்கள் கோரிக்கைகளுக்கு நாங்கள் பதில் தருவோம். நீங்கள் கலிஃபோர்னியா வாசியாக இருந்தால், CCPA-ன் கீழ் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை பற்றிய மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள, இந்த தனியுரிமைக் கொள்கையின் இறுதியில் காணப்படும் “கலிஃபோர்னியாவைப் பற்றிய கூடுதல் விவரங்கள்” என்ற பகுதியில் தெரிந்து கொள்ளவும். 

 

உங்கள் கோரிக்கையில், என்ன தனிநபர் தகவலை நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் அல்லது உங்கள் தனிநபர் தகவல்களை எங்கள் தரவுத் தளத்தில் இருந்து மறைக்க விரும்புகிறீர்களா என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும். உங்கள் பாதுகாப்பிற்காக, உங்கள் கோரிக்கையை நீங்கள் எங்களுக்கு அனுப்பும் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் வரும் தனிநபர் தகவல்கள் குறித்தே எங்களால் பதில் தர முடியலாம், அவ்வாறு பதில் தரும் முன்பாக உங்கள் அடையாளத்தை நாங்கள் சரி பார்க்கலாம். முடிந்தவரை விரைவாக உங்கள் கோரிக்கையை நாங்கள் நிறைவு செய்ய முயற்சிப்போம்.  

 

நாங்கள் பதிவுப் பராமரிப்பு நோக்கங்களுக்காக சில தகவல்களைத் தக்க வைத்துக் கொள்வோம் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

 

நீங்கள் ஓர் மருத்துவகச் சோதனையில் இருந்து விலகினால் அல்லது விலகச் செய்யப்பட்டால், சேவைகளிலிருந்து நாங்கள் எந்த புதிய தகவலையும் சேகரிக்கவோ பெறவோ மாட்டோம். ஆனால் உங்கள் விலகல் கோரிக்கை கிடைக்கப்பெறும் காலம் வரை சேகரிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, சேமிக்கப்பட்டத் தகவல்கள் அழிக்கப்பட மாட்டாது, மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இல்லாதவரை ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவை தொடர்ந்து மருத்துவகச் சோதனையில் பயன்படுத்தப்படலாம்.

 

வெளிப்புற அல்லது மூன்றாம்-தரப்பு தொடர்பிணைப்புகள் 

 

இந்த இணையதளமானது மூன்றாம்-தரப்பு இணையதளங்களுக்கான தொடர்பிணைப்புகளைக் கொண்டிருக்கலாம். இந்தத் தொடர்பிணைப்புகளை நீங்கள் பயன்படுத்தினால், இணையதளத்திலிருந்து நீங்கள் வெளியேறுவீர்கள். எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தனியுரிமை, தகவல் அல்லது மற்ற செயல்பாடுகளுக்கு இந்தத் தனியுரிமைக் கொள்கையோ நாங்களோ பொறுப்பல்ல, சேவைகள் இணைக்கும் ஏதேனும் இணையதளத்தை அல்லது சேவையை இயக்குகிற எந்த ஒரு மூன்றாம் தரப்பினர் உட்பட. சேவைகளில் தொடர்பிணைப்பு இருப்பது, அந்தத் தொடர்பிணைப்பின் இணையதளத்துக்கோ, சேவைக்கோ நாங்கள் பொறுப்பு என்று பொருளல்ல. 

 

மேலும், ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட், ரிம், அல்லது வேறெந்த செயலி உருவாக்குநர், செயலி வழங்குநர், சமூக ஊடகத்தள வழங்குநர், இயக்க முறைமை வழங்குநர், கம்பியில்லா சேவை வழங்குநர், அல்லது கருவி உற்பத்தியாளர் போன்ற மற்ற நிறுவனங்களின் தகவல் சேகரிப்பு, பயன்படுத்தல், வெளிப்படுத்தல், அல்லது பாதுகாப்பு கொள்கைகள் அல்லது செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல. மற்ற சமூக ஊடகப் பக்கங்கள் சம்பந்தப்பட்ட அல்லது அவற்றின் மூலம் நீங்கள் பிற நிறுவனங்களுக்கு வெளியிடும் தனிநபர் தகவல்களும் இதில் அடங்கும். எங்களது இணையதளத்தில் பட்டியலிடப்படும் எந்த ஒரு மூன்றாம் தரப்பு இணையதளத்தையும் அணுக நீங்கள் முடிவு செய்தால், உங்கள் சொந்தப் பொறுப்பிலேயே அவ்வாறு செய்ய வேண்டும். 

 

தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

 

நாங்கள் இணையதளத்தில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யலாம், மற்றும் அதன் விளைவாக, அந்த மாற்றங்களை சேர்க்க நாங்கள் இந்த தனியுரிமைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். நாங்கள் அத்தகைய மாற்றங்கள் அனைத்தையும் எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம், எனவே நீங்கள் இந்த பக்கத்தை அடிக்கடி பார்க்க வேண்டும். சேவைகளில் நாங்கள் மாற்றியமைத்த தனியுரிமைக் கொள்கையை இடுகையிடும்போது மாற்றங்கள் எவையும் அமலுக்கு வரும். 

 

 

எங்களை தொடர்பு கொள்ள

 

உங்களுக்கு Science 37 உலகளாவிய தனியுரிமை கொள்கையைப் பற்றிய கேள்விகள் அல்லது கருத்துக்கள் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து Privacy@Science37.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும். எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை நீங்கள் கீழ்வரும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்:

 

Science37, Inc.

கவனத்திற்குரியவர்: டி பி ஓ
3005 Carrington Mill Blvd, Suite #500
Morrisville NC 2756

 

ஈ.ஈ.ஏ மற்றும் யூ.கே. பற்றிய மேலதிகத் தகவல்கள்

Science 37 என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அமைந்துள்ளது. Science 37 என்பது இ இ ஏ  (EEA )மற்றும் யூ கே (UK )ஆகியவற்றின் ஒப்புதலளிக்கப்பட்ட இயல்தரமான ஒப்பந்த ரீதியான ஷரத்துக்களுக்கு உடன்படுகிறது மற்றும் அவற்றை உபயோகிக்கிறது; மற்றும் இ இ ஏ (EEA )மற்றும் யூ கே (UK )யிலிருந்து அமெரிக்காவுக்கு தனி நபர் தகவல்களை இடம் மாற்றம் செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்ட இயக்க செயல்களையே உபயோகிக்கிறது.

 

நீங்கள் மேலும்

 

  • எங்கள் தகவல் பாதுகாப்பு அதிகாரியை (DPO) Privacy@Science37.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 
  • நீங்கள் வசிக்கும் நாடு அல்லது மண்டலம் அல்லது வேலை இடம் அல்லது எங்கு பயனில் இருக்கும் தகவல் பாதுகாப்பு சட்டத்தில் மீறல் அறியப்படுகிறதோ அங்குள்ள பொருத்தமான கண்காணிப்பு ஆணையத்திடம் நீங்கள் நேரடியாகப் புகார் அளிக்கலாம். தகவல் பாதுகாப்பு ஆணையங்களின் பட்டியல் http://ec.europa.eu/newsroom/article29/item-detail.cfm?item_id=612080 என்பதில் கிடைக்கிறது. 

 

கலிஃபோர்னியாவை பற்றிய கூடுதல் தகவல்கள்

 

கலிஃபோர்னியா நுகர்வோர் தனியுரிமை சட்டம் 2018 (“CCPA”)-இன் படி, கலிஃபோர்னியா வாசிகளை பற்றி நாங்கள் சேகரித்து, பயன்படுத்தி, வெளிப்படுத்தும் தனிநபர் தகவல்களின் வகைகள் தொடர்பில் கீழ்வரும் கூடுதல் தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். 

 

தனிநபர் தகவல்களை சேகரித்தலும், வெளிப்படுத்தலும் 

 

கீழ்வரும் விளக்கப் படத்தில் உள்ளவை: (1) CCPA- வில் பட்டியலிடப்பட்டுள்ள, நாங்கள் சேகரித்த மற்றும் கடந்த 12 மாதங்களில் சேகரித்து, வெளிப்படுத்திய தனிநபர் தகவல் வகைகள்; (2) கடந்த 12 மாதங்களில் எங்கள் செயல்பாட்டு வணிக நோக்கங்களுக்காக நாங்கள் தனிநபர் தகவல்களை வெளிப்படுத்திய மூன்றாம் தரப்பினரின் வகைகள். 

 

தனிநபர் தகவல்களின் வகைகள்

செயல்பாட்டு வணிக நோக்கங்களுக்காக நாங்கள் தனிநபர் தகவல்களை வெளிப்படுத்திய மூன்றாம் தரப்பினரின் வகைகள்

அடையாளங்காட்டிகள் - பெயர், மாற்று பெயர், தொடர்பு விபரம், தனித்த தனிநபர் அடையாளங்காட்டிகள், இணைய அடையாளங்காட்டிகள் போன்றவை

சேவை வழங்குநர்கள்; வணிகக் கூட்டாளர்கள், சட்ட ஆணையங்கள்

இணைய அல்லது வலைய நடவடிக்கை தகவல்கள் - உலாவல் வரலாறு, தேடல் வரலாறு, மற்றும் எங்கள் ஆன்லைன் சொத்துக்களுடனான அல்லது விளம்பரங்களுடனான ஊடாடல்கள் போன்றவை

சேவை வழங்குநர்கள்


 

தனிநபர் தகவல்களை விற்பனை செய்தல் மற்றும் பகிர்தல்

 

CCPA -ன் படி, ஒரு வணிகம் தனிநபர் தகவல்களை விற்பதாக இருந்தால், கலிஃபோர்னியாவாசிகளை தங்கள் தனிநபர் தகவல்கள் விற்கப்படுவதிலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தனிநபர் தகவல்களை நாங்கள் “விற்பதில்லை”. 16 வயதுக்கும் குறைவான, வயதுக்கு வராதவர்களின் தனிநபர் தகவல்களை நாங்கள் விற்பதில்லை. சி சி பி ஏ (CCPA) ஆல் விவரணை செய்யப்பட்ட தனி நபர் தகவலை நாங்கள் பகிர மாட்டோம்; அதாவது,  குறுக்கு-பொருளடக்க நடத்தை பாவனை விளம்பர நோக்கங்களுக்காக தனி நபர் தகவலை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துவதாகிவிடும்.

 

தனிநபர் தகவல்களின் மூலங்கள் 

 

சேவைகளை நீங்கள் தொடர்பு கொள்ளும்போது உங்களிடமிருந்தும், நாங்கள் மேற்சொன்னபடி இந்த தனிநபர் தகவல்களைச் சேகரிக்கிறோம்.

 

தனிநபர் தகவல்களைப் பயன்படுத்துதல்

 

எங்கள் வணிகத்தைச் செயல்படுத்த, நிர்வகிக்க, மற்றும் பராமரிக்க, எங்கள் சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருள்களை வழங்க, மற்றும் எங்கள் வணிக நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை அடைய, மேற்சொன்னவை அடங்கலாக, நாங்கள் இந்த தனிநபர் தகவல்களைப் பயன்படுத்தலாம்.

 

CCPA உரிமைகளும் கோரிக்கைகளும்

சில வரம்புகள் மற்றும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டு, கலிஃபோர்னிய நகரவாசிகள் பின் வரும் கொரிக்கைகளை வைக்கலாம்:

 

  1. திருத்துவதற்கான கோரிக்கை: எங்களிடம் உள்ள உங்களைப்பற்றிய துல்லியமற்ற தனிநபர் தகவல்களைத் திருத்துவதற்கான உரிமை
  2. வரம்புக்கான கோரிக்கை : உங்களைப்பற்றி சேகரிக்கப்பட்ட உணர்ச்சிபூர்வமான  தனி நபர் தகவல்களின் உபயோகம் மற்றும் வெளிப்படுத்தலை வரம்புகுள்ளாக்குவதற்கான உரிமை


 

  1. அறிந்து கொள்வதற்கான கோரிக்கைகள்: உங்கள் வேண்டுகோளுக்கு முந்தைய 12 மாதங்கள் வரையான தகவல்களை நாங்கள் வெளியிட நீங்கள் கோரலாம்:

 

  • உங்களைப் பற்றி நாங்கள் சேகரித்த தனிநபர் தகவல்களின் வகைகள் மற்றும் நாங்கள் சேகரித்த தனிநபர் தகவல்களின் மூலங்களின் வகைகள்;
  • உங்களைப் பற்றி நாங்கள் சேகரித்த தனிநபர் தகவல்களின் குறிப்பிட்ட பகுதிகள்;
  • உங்களைப் பற்றி தனிநபர் தகவல்களை (பொருந்துமானால்) சேகரிப்பதற்கான வணிக மற்றும் தொழில் நோக்கங்கள்; மற்றும்
  • உங்களைப் பற்றி நாங்கள் பகிர்ந்து கொண்ட அல்லது வெளியிட்ட தனிநபர் தகவல்களின் வகைகள், மற்றும் உங்களைப் பற்றி நாங்கள் தனிநபர் தகவல்களை பகிர்ந்து கொண்ட அல்லது வெளியிட்ட மூன்றாம் தரப்பினரின் வகைகள் (பொருந்துமானால்). 

 

  1. அழிப்பதற்கான கோரிக்கைகள்: உங்களிடமிருந்து நாங்கள் சேகரித்த தனிநபர் தகவல்களை நாங்கள் அழிக்க வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை வைக்கலாம். 

 

 ஒரு கோரிக்கை வைக்க, எங்களை தயவுசெய்து 1-866-888-7580 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது “எங்களைத் தொடர்பு கொள்ள” என்ற மேற்கண்ட பகுதியில் சொல்லப்பட்டுள்ள படி தொடர்பு கொள்ளுங்கள். பொருத்தமான சட்டத்திற்கு உட்பட்டு, கோரப்பட்ட தனிநபர் தகவலின் வகை மற்றும் நுண்ணுணர்வு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நாங்கள் உங்கள் கோரிக்கையைச் சரிபார்த்து பதில் அளிப்போம். உங்கள் அடையாளங்களைச் சரிபார்க்கவும் மோசடியான கோரிக்கைளிலிருந்து பாதுகாக்கப்படவும், நாங்கள் உங்களிடமிருந்து பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற கூடுதல் தனிநபர் தகவல்களைக் கோரலாம். நீங்கள் ஒரு குழந்தையின் பெற்றோராகவோ சட்டப்பூர்வ பாதுகாப்பாளராகவோ இருந்தால், 13 வயதிற்குக் குறைந்த குழந்தையின் சார்பில் நீங்கள் கோரிக்கை வைக்கலாம். நீங்கள் அழிப்பதற்கான கோரிக்கையை வைத்தால், உங்கள் தனிநபர் தகவல்களை அழிக்கும் முன்பாக அதனை உறுதி செய்யுமாறு நாங்கள் உங்களைக் கோரலாம்.

 

ஒரு கலிபோர்னியாவாசியின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவராக அறிந்து கொள்வதற்கான கோரிக்கையையோ அழிப்பதற்கான கோரிக்கையையோ வைக்க விரும்பினால், மேற்குறிப்பிட்ட சமர்ப்பிப்பு வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தலாம். எங்கள் சரிபார்ப்புச் செயலாக்கத்தின் பகுதியாக, பொருந்தும் விதத்தில், நீங்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட முகவர் தான் என்பதற்கான ஆதாரத்தை வழங்குமாறு நாங்கள் உங்களைக் கோரலாம். இவை பின்வருவனவற்றையும் உள்ளடக்கி இருக்கலாம்:


 

  1. கலிபோர்னியாவில் தொழில் நடத்த கலிபோர்னிய மாநிலச் செயலாளரால் தரப்படும் உங்கள் பதிவின் அத்தாட்சி;
  2. புரொபேட் கோட் பிரிவுகள் 4121-4130 -ன் படி குடியிருப்பாளரால் தரப்படும் அங்கீகாரம் பெற்ற நபர் என்ற அத்தாட்சி.

 

நீங்கள் அங்கீகாரம் பெற்ற நபராக இருந்து, புரொபேட் கோட் பிரிவுகள் 4121-4130 -ன் படி குடியிருப்பாளரால் தரப்படும் அங்கீகாரம் பெற்ற நபர் என்ற அத்தாட்சியைத் தராவிட்டால், நாங்கள் குடியிருப்பாளரை கீழ்கண்டவற்றை செய்யுமாறு கோரலாம்:

 

  1. குடியிருப்பாளரின் சொந்த அடையாளத்தை எங்களிடம் நேரடியாகச் சரிபார்த்தல்; அல்லது 
  2. குடியிருப்பாளர் கோரிக்கை வைக்குமாறு உங்களை அனுமதித்தார் என்று நேரடியாக உறுதி செய்தல். 

உணர்ச்சிகரமான தனி நபர் தகவல்களின் உபயோகம் மற்றும் வெளிப்படுத்தலை வரம்புள்ளாக்குவதற்கான உரிமை

Science 37  என்பது, உணர்ச்சிகரமான தனி நபர் தகவல்களின் உபயோகம் மற்றும் வெளிப்படுத்தலை சிசி பி ஏ (CCPA) வினால் அங்கீகரிக்கப்பட்ட நோக்கங்களுக்கு அப்பால் செய்வதில்லை.

 

தரவுகளைத் தக்கவைக்கும் பிரிவு

Science 37  என்பது, இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டபடி அல்லது மற்றபடி உங்களிடம் தகவல்களைச் சேகரிக்கும் சமயத்தில் உங்களிடம் வெளிப்படுத்தியபடி, அல்லது உங்களால் அங்கீகரித்தபடி , அல்லது சட்டத்தினால் கோரப்பட்டபடியான நோக்கங்களுக்கு மட்டுமே  நியாயமாக அவசியமாகும் வகையில் நாங்கள் சேகரிக்கும் தனி நபர் தகவல்களைத் தக்க வைத்துக்கொள்கிறது.

 

பாகுபாடு இல்லாமைக்கான உரிமை

 

CCPA -வின் கீழ் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துகையில் சட்டத்திற்கு எதிரான பாகுபாட்டுடன் நடத்துவதற்கெதிரான உரிமை உங்களுக்குள்ளது.